“2022 டி20 WC-ல் எங்களுக்கு எதிரா செஞ்சத கோலி திரும்ப செய்வாரு!” – பாகிஸ்தான் ஷதாப் கான் ஓபன் ஸ்டேட்மென்ட்!

0
1062
Virat

நேற்று 16வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆசியக் கோப்பை தொடரை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் இந்தியா ஏழு முறையும், இலங்கை ஆறு முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் வென்று இருக்கிறது.

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கான எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் இருக்கிறது. கடந்த முறை ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றில் வென்று, இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதேபோல் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் முதல் முறையாக ஒரு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதற்கு அடுத்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது.

இந்தியா வென்ற இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்த பொழுதும், இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான செயல்பாட்டின் காரணமாக, இந்திய அணி அந்தப் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்தது. விராட் கோலி தனது அற்புதமான பேட்டிங்கால், அந்த போட்டியை தனி ஒரு வீரராக வென்று கொடுத்தார். இப்பொழுது வரை அந்தப் போட்டி பலருக்கும் மறக்க முடியாத ஒரு போட்டியாக இருக்கிறது.

தற்பொழுது விராட் கோலி குறித்து பேசி உள்ள பாகிஸ்தான அணியின் துணை கேப்டன் ஷதாப் கான் ” விராட் கோலி நிச்சயமாக உலகத் தரம் வாய்ந்த வீரர். அவரை எதிர்கொள்ள நீங்கள் நிறைய திட்டமிட வேண்டும். எப்படி இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய மைண்ட் கேம்கள் இருக்கின்றன.

- Advertisement -

ஏனென்றால் நிச்சயமாக இங்கு எல்லோரிடமும் திறமை இருக்கிறது. ஆனால் நீங்கள் மற்றவர்களின் மனதை எப்படி படிக்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் எல்லாம் மாறும். பேட்ஸ்மேன் பந்துவீச்சாளர் மனதையும், பந்துவீச்சாளர் பேட்ஸ்மேன் மனதையும் படிக்கிறார்கள். மேலும் அது சூழ்நிலை என்ன என்பதை பொறுத்தது.

விராட் கோலி எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் என்றால், விராட் கோலி எங்களுக்கு எதிராக செயல்பட்ட விதம், உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் கூட எந்த ஒரு பேட்ஸ்மேனும், எங்களைப் போன்ற ஒரு பந்து வீச்சு வரிசைக்கு எதிராக அப்படி செயல்பட்டு இருக்க முடியாது. இதில் அழகான விஷயம் என்னவென்றால், அவரால் எந்த நிலையிலும் எப்போதும் இதைச் செய்ய முடியும்!” என்று கூறியிருக்கிறார்.

நடப்பு ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இலங்கை கண்டி மைதானத்தில் நாளை மறுநாள் செப்டம்பர் இரண்டாம் தேதி மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!