கோலி DRS சர்ச்சை.. தவறான வீடியோவால் ஏற்பட்ட குழப்பம்.. ஒரே ட்வீட்டில் காலி செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்.!

0
1792
Virat

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. வழக்கம்போல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 26 பந்துகளில் 40 ரன்கள் என அதிரடியான துவக்கம் தந்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து அதிரடியாக விளையாட ஆரம்பித்த சுப்மன் கில் பவர் பிளே முடிந்து கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் 23 ரன்களுக்கு விக்கெட்டை பறி கொடுத்தார்.

இதற்கு அடுத்து விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து மிகவும் பொறுமையாக விளையாட ஆரம்பித்தார்கள். கேசவ் மகாராஜ் பந்துவீச்சை அவர்கள் அடிப்பதற்கு எந்த வித முயற்சியும் செய்யவில்லை.

இந்த போட்டியில் கேசவ் மகராஜ் பந்துவீச்சுக்கு ஆடுகளம் மிகவும் ஒத்துழைத்தது. அவர் வீசிய ஒரு பந்தை விராட் கோலி தடுத்து விளையாட சென்ற பொழுது, பந்து விலகி கீப்பர் இடம் சென்றது.

- Advertisement -

அந்த நேரத்தில் ஒரு சிறிய சத்தம் வர, நடுவர் அவுட் தராத காரணத்தினால் தென் ஆப்பிரிக்கா ரிவ்யூ சென்றது. ஆனால் ரீ ப்ளேவில் பார்த்த பொழுது, பந்து பேட்டுக்கு மிக நெருக்கமாக சென்றது, ஆனால் மிக அதிர்ஷ்டவசமாக பந்து பேட்டில் உரசவில்லை.

அதே சமயத்தில் விராட் கோலி இடம் பந்து வருவதற்கு முன்பே அதிர்வு தென்பட்டது. ஆனால் இதை முதல் முறை பார்க்கும் பொழுது பந்து பேட்டில் பட்டதாக போலவே தெரிந்தது. விராட் கோலியும் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் உண்மையில் பந்து பேட்டில் படவில்லை.

இதன் காரணமாக அப்பொழுது ஒரு சிறிய சர்ச்சை ஏற்பட்டது. பிறகு மீண்டும் தெளிவான ரீப்ளேவில் உண்மை தெரிந்தது. அந்த நேரத்தில் வந்த ஒரு சிறிய சத்தத்தை நம்பி தென் ஆப்பிரிக்கா ஒரு ரிவ்யூவை இழந்துவிட்டது.

இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வடிவேலு காமெடி மீம் ஒன்றை பகிர்ந்தது சுவாரசியமாக இருக்கிறது.