“கோலி உலக கோப்பையில் எங்க கூட 2 தடவை டக் அவுட் ஆகனும்!” – கிளார்க் ஆசையில் விழுந்த மண்!

0
6047
Virat

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான போட்டி 3 நாட்களுக்குப் பின்பு நான்காவது நாளான நேற்று அமைந்தது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட போட்டி அமைந்திருந்த விறுவிறுப்பான முறையிலும், மேலும் போட்டியில் வெளிப்படுத்தப்பட்ட சிறந்த கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது.

- Advertisement -

எனவே நடப்பு உலகக்கோப்பை இந்த போட்டியில் இருந்து சூடுப்பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. இந்தப் போட்டிக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மூலம் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் மேலும் மக்களிடையே வேகமாக சென்றடையும்.

இதற்கு இன்னும் பலம் சேர்க்கும் வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய சுவாரசியமான பேச்சின் மூலமாக ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கூட்டி வருகிறார்கள். இந்த வகையில் தன்னுடைய ஜாலியான ஒரு விருப்பத்தை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் விராட் கோலி குறித்து வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து மைக்கேல் கிளாக் கூறும் பொழுது “ஆமாம் விராட் கோலி எங்களுடன் நடக்கும் முதல் போட்டியில் டக் அவுட் ஆகவேண்டும். அதற்குப் பிறகு அவர் நிறைய சதங்கள் அடித்து, இறுதிப் போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியா அணியுடன் டக் அவுட் ஆக வேண்டும் என்று விரும்புகிறேன்.

- Advertisement -

விராட் கோலி ஒரு மேதை. அவர் ஒரு கிளாஸ். அவரால் எந்த நிலையிலும் சிறந்த நிலைக்கு வர முடியும். அவரை இதிலிருந்து விலக்கி யோசிக்கும் யாரும் முட்டாள் என்று நான் நினைக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் நான் பார்த்து அவர்தான் மிகச்சிறந்த வீரர்.

அவருக்கு கண்டிஷன் மிக நன்றாக தெரியும். அவரால் இந்த பார்மட்டில் மற்ற எந்த பேட்ஸ்மேன்களை விடவும் இலக்கை சேஸ் செய்வது எப்படி? என்று தெரியும். அவர் ஒரு சிறந்த உலகக் கோப்பையை பெற்றார் என்றால் நான் அதுகுறித்து எந்த ஆச்சரியமும் பட மாட்டேன்!” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் ஆசையில் விராட் கோலி 85 ரன்கள் எடுத்து மண்ணள்ளி போட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் விராட் கோலி ஒரு வாய்ப்பு தந்து அதை மார்ஸ் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது!