இந்திய கிரிக்கெட்

51 பந்து 121 ரன்.. என்னையா தூக்க பிளான் போடுறீங்க.. இங்க நான்தான் ராஜா.. கம்பீருக்கு மெசேஜ் அனுப்பிய சஞ்சு சாம்சன்.. கேசிஎல் 2025

திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற கேரளா கிரிக்கெட் லீக் தொடரின் 8வது போட்டியில் கொச்சி ப்ளூ டைகர்ஸ் மற்றும் ஏரியஸ் கொல்லம் சைலெர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இதில் கொச்சி அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் தனது அபாரமான அதிரடி ஆட்டத்தின் மூலமாக தனது அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வரும் கேரளா கிரிக்கெட் லீக் தொடரின் 8வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஏரியஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி அணி களம் இறங்கிய நிலையில் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தினார். 51 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு நிலையில் 14 போர் மற்றும் 7 சிக்ஸ் என 121 ரன்கள் குவித்து கொச்சி அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார்.

இதனால் கொச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் குவித்து அசாதாரணமான வெற்றியை பதிவு செய்தது. இந்த சூழ்நிலையில் 121 ரன்கள் குவித்து கொச்சி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சாம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சுப்மான் கில் துணை கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டு ஆசிய கோப்பை தொடரில் இடம் பிடித்திருந்தார்.

- Advertisement -

மேலும் அபிஷேக் சர்மா இடது கை ஆட்டக்காரராக இருக்கும் போது கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் இன்னிங்சை துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய டி20 அணியில் இதுவரை தொடக்க வீரராக செயல்பட்ட சாம்சன், இனி மிடில் வரிசை வீரராக விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், இதற்கு முன்னர் நடைபெற்ற அலப்பி அணியுடன் ஆன போட்டியில் மிடில் வரிசையில் இறங்கிய சாம்சன் 3 பந்துகளில் 6 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

இதையும் படிங்க:தலைமை பயிற்சியாளராகும் சவுரவ் கங்குலி.. அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது.. புதிய திருப்பம்

இந்த நிலையில் கொச்சி அணியின் நலன் கருதி மீண்டும் துவக்க இடத்தில் இறங்கி தனது அதிரடியை வெளிப்படுத்தி இருக்கும் சாம்சன், இந்த போட்டியின் மூலமாக இந்திய அணியில் தான் மீண்டும் துவக்க வீரராக விளையாடுவதற்கு இந்திய அணியின் கோச் கம்பீருக்கு ஒரு பெரிய செய்தியை அனுப்பி இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். துவக்க இடத்தை பொருத்தவரை நான் தான் ராஜா என மீண்டும் நிரூபித்திருக்கும் சாம்சன் ஆசியக் கோப்பை தொடரில் துவக்க இடத்தில் விளையாடுவாரா? அல்லது மிடில் வரிசையில் களம் இறக்கப்படுவாரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -
Published by