இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது ஒரு அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கும் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கு அழுத்தமான புள்ளியை வைத்து முதல் கேப்டனாக சவுரவ் கங்குலி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது முதல் முறையாக முழு பொறுப்பையும் தலைமை பயிற்சியாளராக ஏற்க இருக்கிறார்.
ஆரம்பப் பதவிகள்
முதலில் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்தார். அவருடைய சொந்த மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெங்கால் கிரிக்கெட்டில் நிறைய இளம் திறமைகள் உருவாவதற்கு முக்கிய காரணமாக பங்களிப்பு செய்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பொறுப்புக்கு வந்தார். அவருடைய பதவி காலத்தில் அவருக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையில் சுமுகமான உறவு காணப்படவில்லை. மேலும் அதே நேரத்தில் விராட் கோலி 3 வடிவ கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். இப்பொழுதும் இது குறித்து அவர் மீது விமர்சனங்கள் இருந்து வருகிறது.
ஏமாற்றி கொடுத்த டெல்லி
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு துணைப் பயிற்சியாளராக கடந்த வருடம் இருந்தார். இந்த வருடம் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை கேட்டிருந்தார். ஆனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகம் கொடுக்கவில்லை. ஆனால் தற்சமயம் சவுத் ஆப்பிரிக்கா டி20 பிரட்டோரியா கேப்பிட்டல் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு சவுரவ் கங்குலியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.
இதையும் படிங்க : தேடி வந்த கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்த ஸ்ரேயாஸ்.. குழப்பி கெடுத்த கம்பீர் அகர்கர் – வெளியான தகவல்கள்
இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறும் பொழுது “நான் வெவ்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறேன். கிரிக்கெட் அணிக்கு வெளியில் பெங்கள கிரிக்கெட் சங்க தலைவர் ஆகவும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் பொறுப்பில் இருந்தேன். எனவே எனக்கு ஒரு போதும் நேரம் கிடைக்கவில்லை. ஆனால் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம். மேலும் எனக்கு 50 வயதுதான் ஆகிறது, எனவே எங்கு எல்லாம் செல்கிறது என்றும் பார்ப்போம்” என்று கூறி இருக்கிறார்.






