காயத்தால் கேப்டன் கே.எல்.ராகுல் வெளியேற்றம் ; தென் ஆப்ரிக்கா டி20ஐ தொடரை வழிநடத்த புதிய கேப்டன் அறிவிப்பு

0
392
KL Rahul and Rahul Dravid

ஐ.பி.எல் தொடர் முடிந்து உலக கிரிக்கெட் அணிகள் சர்வதேச போட்டிகளில் விளையாட ஆரம்பித்திருக்கின்றன. நியூசிலாந்து இங்கிலாந்திற்குப் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. வெஸ்ட் இன்டீஸ் அணி நெதர்லாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டி தொடரை முடித்து விட்டு, தற்போது பாகிஸ்தானிற்குப் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஆப்கன் அணி ஜிம்பாப்வே அணியுடன் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா இலங்கைக்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் விளையாட சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்திய அணியும் ஐ.பி.எல் முடிந்து செளத் ஆப்பிரிக்க அணியோடு உள்நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில், நாளை 9ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. இதன் எல்லாப் போட்டிகளும் இரவு ஏழு மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் ஒளிப்பரப்பாகிறது.

- Advertisement -

இந்தத் தொடருக்கான இந்திய அணி, ஐ.பி.எல் தொடரின் இறுதிக்கட்டத்திற்குச் சற்று முன்னால் அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, மொகம்மத் சமி, ஜஸ்ப்ரீட் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்த அணியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கும், பாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் இந்திய அணிக்குள் திரும்பினர். அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய புதுமுக வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் நாளை தொடரின் முதல் ஆட்டம் ஆரம்பிக்கப்பட இருக்க, கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்த கே.எல்.ராகுல் காயத்தால் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறுவதாக பி.சி.சி.ஐ அறிவித்து இருக்கிறது. புதிய கேப்டனாக ரிஷாப் பண்ட்டை கேப்டனாக அறிவித்திருக்கிறது. கே.எல்.ராகுலின் காயம் எத்தகையது? அவருக்கான மாற்று வீரர் யார்? போன்ற விபரங்கள் தெரியப்படுத்தப்படவில்லை!

- Advertisement -