குல்தீப்பை நீக்கியது ஏன்? – மாற்றி மாற்றி பேசிய ராகுல்

0
318

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடுமையாக போராடி வெற்றி பெற்றது. நான்காவது நாள் ஆட்டத்தில் வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்தன. ரிஷப் பன்ட் ,அக்சர் பட்டேல் அடுத்தடுத்த ஆட்டம் இழக்க அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் முதல் டெஸ்டில் ஆட்டநாயகன் விருது வென்ற குல்தீப் யாதவை நீக்கியது ஏன் என்பது குறித்து கே எல் ராகுல் பதில் அளித்துள்ளார். அதில், முதல் நாள் ஆட்டத்தில் நாங்கள் ஆடுகளத்தை பார்க்கும் போது சுழற்பந்துவீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டிற்கும் சாதகமாக செயல்படும் என கணித்தோம். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் குல்தீப்பை  நாங்கள் மிகவும் தவற விட்டோம் என்று நினைத்தேன். காரணம் பந்து சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது.

குல்தீப் யாதவ் இருந்து இருந்தால் நிச்சயம் இரண்டாவது இன்னிங்சில் கை கொடுத்திருப்பார். ஐபிஎல் போட்டியில் இம்பாக்ட் விதி  கொண்டுவரப்பட்டுள்ளது. அதே விதி டெஸ்ட் போட்டியில் நடைமுறைப்படுத்தியிருந்தால் நான் இரண்டாவது இன்னிங்சில் நிச்சயம் குல்தீப்பை கொண்டு வந்திருப்பேன். எனினும் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதனால் குல்தீப்பை  நான் நீக்கியதற்கு எடுத்த முடிவு குறித்து எந்த வருத்தமும் தயக்கமும் எனக்கு இல்லை .மிர்பூரில் ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை வைத்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ராகுல் கூறினார். இந்த வெற்றியின் மூலம் வங்கதேசத்துக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டியில் 11 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய அணி வென்றால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -