INDvsSA.. தனி ஆளாக போராடும் கேஎல்.ராகுல்.. ரபாடா 28 வயதில் மெகா சாதனை.. முதல் நாளே ஏமாற்றம்!

0
866
Rahul

இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்கா சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளத்தில் இருந்த பவுன்ஸ் மற்றும் வானம் மேகமூட்டமாக இருந்தது தென் ஆப்பிரிக்காவுக்கு பந்துவீச்சில் மிகவும் உதவியாக அமைந்தது.

- Advertisement -

இந்திய அணியின் விக்கெட் வீழ்ச்சியை முதலில் ரோஹித் சர்மா ரபாடா பந்தில் 5 ரன்களுக்கு வெளியேறி ஆரம்பித்து வைத்தார். இன்னொரு துவக்க இளம் ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 17 ரன்களில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து மூன்றாவது வீரராக சில ஆட்டங்களாக களம் இறங்கி வரும் இளம் வீரர் சுப்மன் கில் துரதிஷ்டவசமாக இரண்டு ரன்கள் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உடனேயே ஆட்டம் பெவிலியன் திரும்பி இருக்க வேண்டியது, ஆனால் யான்சன் மற்றும் டோனி டி சோர்சி இருவரும் எளிய கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார்கள்.

இதற்கு அடுத்து இந்த ஜோடி 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் 31, விராட் கோலி 38 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

இதற்குப் பிறகு பவுலிங் ஆல்ரவுண்டர்கள் அஸ்வின் 8, சர்துல் தாக்கூர் 24 மற்றும் பந்துவீச்சாளர் பும்ரா 1 என மூவரையும் வைத்துக்கொண்டு, ஒரு முனையில் தனியாக போராடிய கேஎல் ராகுல் அணியின் ஸ்கோரை எட்டு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் என கொண்டு வந்தார். இவர்களுடன் மட்டும் இணைந்து அவர் 101 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.

இந்த நிலையில் மழை குறுக்கிட்ட காரணத்தினால் தற்பொழுது போட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஆட்டம் இழக்காத கேஎல்.ராகுல் 105 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 70 ரன்கள் எடுத்திருக்கிறார்.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா இதுவரையில் 17 ஓவர்கள் பந்து வீசி, 44 ரன்கள் விட்டுத் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். தற்பொழுது அவர் ஒட்டுமொத்தமாக மூன்று வடிவ சர்வதேச கிரிக்கெட்டிலும் 500 விக்கெட்டை 28 வயதில் கைப்பற்றியதின் மூலம், மிகக்குறைந்த வயதில் இதைச் செய்த தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளராக சாதனை படைத்திருக்கிறார்!