“ரிங்கு சிங்க்கு ஓடிஐ தொடரில் வாய்ப்பு கிடைக்குமா?.” – கேப்டன் கேஎல் ராகுல் கொடுத்த நேர்மையான பதில்

0
1466

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒரு நாள் தொடரை விளையாட உள்ளது. இதற்கு முன்னர் நடந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

ஒரு நாள் தொடருக்கு கே.எல். ராகுல் தலைமை தாங்க உள்ளார். இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி தற்போது களமிறங்குகிறது. எனவே இந்திய அணிக்கு ஒரு நாள் தொடர் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஒரு வருடத்திற்குள் அவரின் செயல்பாடு அபாரமாக உள்ளது. தற்போது வளர்ந்து வரும் வீரராக, விளையாட்டில் அதிகமாக பேசப்படும் திறமையாளர்களில் ஒருவராக உள்ளார். எனவே இவர் குறித்தும், இளம் இந்திய அணி குறித்தும் கே எல் ராகுல் தனது கருத்துக்களைப் பகிர்ந்து உள்ளார்.

இது குறித்த அவர் கூறியதாவது
“நீங்கள் இந்தியாவிற்காக விளையாடும் பொழுது உங்களின் மதிப்பு உயரும். இதுவே உங்களை பெருமளவு ஊக்கப்படுத்தும். தற்போது நிறைய புது முகங்களுக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவை எதிர்த்து அவர்களின் சொந்த மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இதுவும் மற்ற தொடர்களைப் போலத்தான் நான் கருதுகிறேன்.

எனது கவனம் முழுவதும் இந்தத் தொடரில் மட்டுமே உள்ளது. நான் தற்போது மிடில் ஆடரில் பேட்டிங் செய்கிறேன். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அணிக்கு தகுந்தவாறு நான் களம் இறங்குகிறேன். புதிய சவால்களை ஏற்பதில் நான் என்றுமே மகிழ்ச்சி அடைவேன். என்னால் முடிந்தளவு போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்.

- Advertisement -

காயம் காரணமாக நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை தவறவிட்டுள்ளேன். சமீபத்தில் ஒரு நாள் தொடரில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில புதிய முகங்கள் அணியில் உள்ளனர். அவர்கள் விராட் மற்றும் ரோஹித் இடங்களில் இறங்கி அணிக்குத் தேவையான பங்களிப்பை வழங்க தயாராக உள்ளனர். அவர்கள் நினைத்தபடி விளையாட முழு சுதந்திரமும், நேரமும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

உலக கோப்பையில் நாங்கள் விளையாடிய விதம் மிகவும் உற்சாகமாக இருந்தது. தற்போது இந்தியாவின் பந்துவீச்சை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் விளையாடியது இல்லை. ஆனால் ஐபிஎல் விளையாடிய அனுபவம் அவர்களுக்கு உண்டு. அவர்களால் எந்த கடினமான சூழ்நிலையிலும் சிறப்பாகப் பந்து வீச முடியும். ஹர்ஸ்தீப் மற்றும் முகேஷ் குமாரின் பந்துவீச்சு செயல்பாடு மிகவும் நன்றாக உள்ளது. இந்தத் தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

ரிங்கு சிங் களம் இறங்குவது குறித்து கேட்கிறீர்கள். அவரை நான் ஐபிஎல்லில் விளையாடிய போது பார்த்தது. அவரின் தற்போதைய முன்னேற்றம் வியக்க வைத்துள்ளது. அவரின் அமைதி புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். டி20 வடிவத்தில் அவரது செயல்பாடு சிறப்பாக உள்ளது மேலும் ஒரு நாள் தொடரிலும் அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறி இருக்கிறார்.