வீடியோ: ஓபனிங் இறங்கி, வந்த வேகத்தில் அவுட்டான கேஎல் ராகுல்; 1 ரன்னுக்கு அவுட் – வீடியோ உள்ளே..!!

0
180

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஒரு ரன்னுக்கு ஆட்டம் இழந்தார் கேப்டன் கே எல் ராகுல். இதன் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணியுடன் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது ஹராரே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் கேப்டன் பொறுப்பேற்று விளையாடு வரும் கேஎல் ராகுல் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். துவக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது.

- Advertisement -

13 ஓவர்கள் முடிவில் 31 ரன்கள் மட்டுமே எடுத்து நான்கு விக்கெட்டுகளை ஜிம்பாப்வே அணி இழந்து இருந்தபோது சிக்கந்தர் ராசா மற்றும் சீன் வில்லியம்ஸ் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாடினர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட் 41 ரன்கள் சேர்த்தது. வில்லியம்ஸ் 42 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். ராசா மற்றும் இனோசென்ட் இருவரும் தலா 16 ரன்கள் அடித்திருந்தனர்.

சீரான இடைவெளியில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வந்ததால், 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஜிம்பாப்வே அணி ஆல் அவுட் ஆனது. இறுதிவரை ஆட்டமிழக்காத ரியான் பார்ள் 39 ரன்கள் டித்திருந்தார். இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஷ்ராதுல் தாக்கூர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பந்துவீசிய மற்ற வீரர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இந்திய அணிக்கு 162 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த போட்டியில் இந்திய அணிக்கு துவங்கிய தவான் மற்றும் கில் ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 192 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றி பெற்று தந்தது. ஆனால் இம்முறை தவான் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த முடிவு இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை.

- Advertisement -

ஐபிஎல் தொடருக்கு பிறகு முதல் முறையாக பேட்டிங் செய்யும் கேஎல் ராகுல் 4 பந்துகள் மட்டுமே பிடித்து ஒரு ரன்கள் எடுத்திருந்தபோது, வேகப்பந்துவீச்சாளர் நியூச்சி வீசிய பந்தில் எல் பி டபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் எடுத்த இந்த முடிவுக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. கேஎல் ராகுலின் ஆட்டமிழந்த வீடியோ இதோ..

மூன்றாவது வீரராக களமிறங்கிய கில்- ஷிகர் தவனுடன் இணைந்து நிதானமாக விளையாடி வந்தார். துரதிர்ஷ்டவசமாக தவான் 21 பந்துகளில் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.