ஏண்டா இதெல்லாம் இங்க வந்து தான் செய்வீங்களா ? கடுப்பான கேஎல் ராகுல் !

0
340
kl rahul shahadat hussein shanto

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான  இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது . முதலில் ஆடிய  பங்களாதேஷ் அணி  227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 17 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது .

இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி  அடுத்தடுத்து விக்கெட்டுகள்  இழந்தாலும் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட்  ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 304 ரன்களை குவித்தது. ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 93 ரன்களும்  ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களும்  எடுத்தனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ஷகீப் அல் ஹசன் மற்றும் தைஜூல் இஸ்லாம் ஆகியோர் நான்கு  விக்கெட்களை வீழ்த்தினர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஆடிய  பங்களாதேஷ் அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது அப்பொழுது போதிய வெளிச்சமின்மை காரணமாக  ஆட்டமானது முடித்துக் கொள்ளப்பட்டது. இந்திய அணியினர் தங்களுக்கு கிடைத்த கொஞ்சம் அவகாசத்தில் எப்படி என்னும் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி விடலாம் என்று தீவிரமாக முயற்சி செய்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

இந்நிலையில் நேற்று ஆட்டம் முடிவதற்கு சிறிது நேரம் இருக்கும் பொழுது நடந்த ஒரு சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. போட்டி முடியும் நேரம்  நெருங்கிக் கொண்டிருக்கும்போது,   பங்களாதேஷ் அணியின் துவக்க வீரர் காலதாமதம் செய்வது போல் செய்த நடவடிக்கை  இந்திய கேப்டன் கே.எல் ராகுலை கோபப்படுத்தியது.

பங்களாதேஷ்  வீரர் சாண்டோ தன்னுடைய பேட்டை மாற்ற வேண்டும் என்று கூறி  சப்ஸ்டிடியூட் வீரரை பேட்டை எடுத்துக் கொண்டு வருமாறு அழைத்தார். சிறிது நேரம் காலம் கடத்திவிட்டு அதன் பின்னர்  தன்னுடைய  பழைய பேட்டையே  எடுத்துக்கொண்டு ஆட வந்தார்  இந்த நடவடிக்கை இந்திய அணியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

- Advertisement -

இதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் கே எல் ராகுல்  பங்களாதேஷ் அணியினருடன்   ஆவேசமாக விவாதம் செய்தார் . ஏன் தேவையில்லாமல் நேரத்தை கடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று அவர்களிடம் கூறினார். பின்னர் போட்டியின் நடுவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தனர். டெஸ்ட் போட்டிகளின் போது ஆட்டம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில்  பேட்ஸ்மேன்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது  எப்பொழுதும் மறக்க கூடிய ஒன்றுதான் .