தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் சுப்மன் இல்லை விட சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார் என இந்திய முன்னள் பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜா கூறியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் 12 போட்டிகளில் 617 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பையை கைவசம் வைத்திருக்கிறார். அதே சமயத்தில் சக தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் சுப்மணியின் 12 போட்டியில் 601 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த ஜோடியின் அபார ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
கலக்கும் சாய் சுதர்சன்
இந்திய ஒருநாள் அணியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சாய் சுதர்சன் இரண்டு அரை சதங்கள் அடித்து இருந்தார். இது பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான ஆடுகளமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு நடுவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டே, இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான முறையில் விளையாடி சதங்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து ஒரு காயத்திற்கு பிறகு திரும்பி வந்த அவர் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகச் சிறப்பான முறையில் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல்முறையாக இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாய் சுதர்சன்தான் பெஸ்ட்
இதுகுறித்து அஜய் ஜடேஜா பேசும் பொழுது “சாய் சுதர்சன் வருங்கால கேப்டன் கில்லை தாண்டி இருக்கிறார். அவரது பேட்டிங் கண்ணுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் அவர் கில்லை தாண்டவில்லை. அதற்கு முந்தைய போட்டிகளிலும் அவரைத் தாண்டி சிறப்பாக விளையாடியிருக்கிறார். கில் உடன் ஒப்பிடும் பொழுது சாய் சுதர்சன் பேட்டிங் மிகவும் ரிஸ்க் ஃப்ரீ பேட்டிங் ஆக இருக்கிறது”
இதையும் படிங்க : முடிய பிடிச்சு உன்ன தூக்கி போட்டுருவேன்.. சண்டைக்கு முக்கியமான காரணம் இதுதான் – கைப் வெளியிட்ட தகவல்
“சாய் சுதர்சன் தொடர்ந்து இந்திய அணிக்கு விளையாடும் ஒரு வீரர் போல விளையாடுகிறார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கில் சரியான டைமிங்கில் வந்தை அடித்து விளையாட முடியவில்லை. எனவே அவர் பெரிய ஷாட் அடிக்க வேண்டிய அவசியத்தில் இருந்தார். ஆனால் சாய் சுதர்சனுக்கு அப்படி எதுவும் இல்லை எனவே அவர் நிதானமாக இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.