இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் வீரர் கேஎல்.ராகுல் அபாரமாக விளையாடிய 60 பந்தில் சதம் அடித்ததின் மூலமாக பல்வேறு சாதனைகளை ஒரே போட்டியில் படைத்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு குஜராத் மற்றும் டெல்லி இரு அணிகளுக்கும் மிக முக்கிய போட்டியாக இது அமைந்திருந்த நிலையில், போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
மந்தமான தொடக்கம்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வந்த டெல்லி அணிக்கு இந்த முறை கேஎல்.ராகுல் துவக்க ஆட்டக்காரராக வந்தார். அவருடன் இன்னொரு துவக்க ஆட்டக்காரராக வந்த பாப் டு பிளேசிஸ் 10 பந்துகளை சந்தித்து வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். டெலி அணி நான்கு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
இங்கிருந்து அதிரடி காட்ட ஆரம்பித்த கே எல் ராகுல் மிகச் சிறப்பாக விளையாடி 60 பந்துகளில் தன்னுடைய ஐந்தாவது ஐபிஎல் சதத்தை அடித்தார். இறுதி வரை களத்தில் நின்ற கே எல் ராகுல் 65 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 112 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது.
கேஎல்.ராகுல் படைத்த சாதனைகள்
இன்றைய போட்டியில் சதம் அடித்ததின் மூலம் விக்கெட் கீப்பராக அதிகம் சதம் அடித்தவராக மூன்று சதங்கள் அடித்து கேஎல் ராகுல் சாதனை படைத்தார். இரண்டாவது இடத்தில் ஆடம் கில்கிரிஸ்ட் இரண்டு சதங்கள் உடன் இருக்கிறார். மேலும் பஞ்சாப் லக்னோ மற்றும் டெல்லி என விளையாடிய 3 அணிகளுக்கும் சதம் அடித்த ஒரே வீரராக கேஎல்.ராகுல் இருக்கிறார்.
இதையும் படிங்க : இப்ப சிஎஸ்கேதான் என்னோட முதல் குறி.. வரலாற்று சோகம் நடக்கும் – சஞ்சு சாம்சன் பேட்டி
இத்துடன் டி20 போட்டிகளில் அதிவேகமாக 8000 ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் ஆக சாதனை படைத்திருக்கிறார். கேஎல்.ராகுல் இதை 224 இன்னிங்ஸ்களில் செய்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் விராட் கோலி 243 இன்னிங்ஸ்களில் இருக்கிறார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் இசான் கிஷான் பிரியன்ஸ் ஆர்யா, அபிஷேக் ஷர்மா மற்றும் வைபவ் சூரியவன்சி என நான்கு இடதுகை வீரர்கள் மட்டுமே சதம் அடித்திருக்க, முதல் வலதுகை பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் சதம் அடித்திருக்கிறார்.