இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெல்ல வேண்டிய நிலையில் இருந்து மீண்டும் ஒரு முறை ரன்களை துரத்தும் பொழுது ராஜஸ்தான் தோல்வி அடைந்தது. இது குறித்து கேப்டன் சஞ்சு சாம்சன் மிகவும் வேதனையான முறையில் பேசி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்ட ராஜஸ்தான் அணி ஆறுதல் வெற்றிக்காக இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அசத்திய இந்திய வீரர்கள்
இன்றைய போட்டியில் முதல்முறையாக பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர்கள் சிறப்பான முறையில் விளையாடினார்கள். நெகல் வதேரா 37 பந்தில் 70 ரன்கள், ஷஷான்க் சிங் 30 பந்தில் ஆட்டம் இழக்காமல் 59 ரன்கள் எடுத்தார்கள். சிறப்பாக விளையாடிய பஞ்சாப் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது.
இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து பவர் பிளே ஆறு ஓவர்கள் முடிவில் 89 ரன்கள் குவித்தது. ஆனால் வழக்கம்போல கடைசி சில ஓவர்களில் சொதப்பி மீண்டும் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேற்கொண்டு அந்த அணிக்கு ஒரு போட்டி மட்டுமே எஞ்சி இருக்கிறது.
புள்ளி பட்டியல் மோதல்
தற்போது 13 போட்டிகளில் 6 புள்ளிகள் உடன் ராஜஸ்தான் 9வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே 12 போட்டிகளில் 6 புள்ளிகள் உடன் 10வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் தனது கடைசி போட்டியில் 20ம் தேதி சி எஸ் கே அணிக்கு எதிராக விளையாடுகிறது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை புள்ளி பட்டியலில் சிஎஸ்கே கடைசி இடத்திற்கு சரிந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தோல்வி குறித்து பேசி இருக்கும் சஞ்சு சாம்சன் “பவர் பிளேவில் 89 ரன்கள் கிடைத்த பிறகு நாம் துவக்க வீரர்களிடம் வேறு எதுவும் கேட்க முடியாது. எங்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்தது ஆனால் அந்த வேகத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆடுகளம் வழக்கத்திற்கு மாறாக இருந்தது”
இதையும் படிங்க : 17 பாயிண்ட்.. ஆனா பஞ்சாப் பிளே ஆப் போக முடியாத சோகம்.. GT DC மேட்சில் நடக்க போகும் அதிசயம் – முழு தகவல்கள்
“ஆனால் இந்த ரன்களை நாங்கள் துரத்தக்கூடிய இடத்தில் இருந்தோம். எங்களிடம் அதற்கான பவர் ஹிட்டர்கள் இருந்தார்கள். மேலும் நாங்கள் இதை செய்து முடித்திருக்க வேண்டும். அனுபவம் உள்ளவர் பார்ட்னர்கள் பொறுப்பு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் அடுத்த சீசனில் நிறைய மேம்படுத்த வேண்டும். தற்போது பெரிய முயற்சிகள் செய்ய முடியாது. இப்போதைக்கு சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி பெறுவது மட்டுமே முக்கிய நோக்கமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.