“கேஎல்.ராகுல் நல்லாதான் இருக்கார்.. ஆனா நியூசிலாந்து கூட இதை செஞ்சே ஆகனும்!” – ஆரோன் பின்ச் சுட்டிக் காட்டல்!

0
2318
Finch

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் இந்திய அணிக்கு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பான ஒரு தொடராக இருந்து வருகிறது.

இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் புதிய சாதனைகளையும், சுழற் பந்துவீச்சாளர்கள் புதிய சாதனைகளையும் படைத்து வருகிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய பேட்டிங் யூனிட்டில் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இரண்டு உலக கோப்பைகளில் தொடர்ந்து 500 ரன்கள் கடந்த முதல் பேட்ஸ்மேனாக புது சாதனையை எட்டி இருக்கிறார்.

அதே சமயத்தில் ஒரு உலகக் கோப்பையில் 50க்கும் மேற்பட்ட ரன்களை அதிக முறை எட்டிய வீரராக சச்சினுடன் விராட் கோலி புதிய சாதனையை பகிர்ந்திருக்கிறார்.

மேலும் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்திய மிடில் ஆர்டர் இந்த முறை மிகச் சிறப்பாக உலகக் கோப்பையில் செயல்பட்டு வருகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் மிடில் ஆர்டரில் இந்திய அணிக்காக முதன்முதலாக உலகக் கோப்பையில் 400 ரன்கள் கடந்த வீரராக இருக்கிறார்.

- Advertisement -

மேலும் ஐந்தாவது பேட்ஸ்மேன் ஆக வரும் கே.எல்.ராகுலும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரும் தன்னுடைய பங்குக்கு 300 ரன்கள் கடந்து இருக்கிறார். இப்படி எல்லாமே புதிய சாதனைகளைக் கொண்டு இருக்கிறது.

இதில் கே எல் ராகுல் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் பேசும்பொழுது “கேஎல்.ராகுல் நேற்று ஆட்டத்தை தொடங்கிய விதம் மிகவும் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. சில நேரங்களில் அவர் தன்னுடைய இன்னிங்ஸை உருவாக்க சில பந்துகளை எடுத்துக் கொள்கிறார்.

ஆனால் நேற்று கே.எல்.ராகுல் எடுத்ததும் மிகச் சரியாக இருந்தார். குறிப்பாக இந்திய அணியின் டாப் பார்டர் பேட்ஸ்மேன்கள் மூவரும் அரைசதம் அடித்திருந்த இப்போது அவர் எடுத்ததும் அதிரடியாக ஆரம்பித்தார்.

இதுதான் தற்போது இந்தியாவுக்கு தேவையாக இருக்கிறது. இந்திய அணியின் மிடில் ஆர்டர் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளாமல் சீக்கிரத்தில் தங்களது ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். நேற்று கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இடையே இது மிகச் சிறப்பாக இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!