இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கேஎல்.ராகுல் இடம் பல சுவாரசியமான கேள்விகள் முன்வைக்கப்பட்டது, அந்தக் கேள்விகளுக்கு கேஎல்.ராகுல் எதிர்பார்க்காத பதில்களை கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக ஆறாவது இடத்தில் கேஎல்.ராகுல் பேட்டிங் செய்து வருகிறார். இடைப்பட்ட காலத்தில் தன்னுடைய விக்கெட் கீப்பிங் திறமையை மேம்படுத்தியதால் ரிஷப் பண்ட்டை விட ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு கேஎல்.ராகுலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
முதலில் கேஎல்.ராகுலிடம் எந்த மூன்று வீரர்களை டி20 பிளேயிங் லெவனில் வைப்பீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் மேலும் கரிபீயனின் நிக்கோலஸ் பூரன் ஆகியோரை தேர்ந்தெடுத்தார்.
இத்துடன் சென்னை சேப்பாக்கம் மைதானம் தான் விளையாடுவதற்கு மிகவும் கடினமான மைதானமாக இருந்ததாகவும், 2021 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் தான் அடித்த சதம் தனக்கு மிகவும் பிடித்த சிறந்த சதம் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் கேஎல்.ராகுலிடம் வலைப்பயிற்சியில் எந்த பந்துவீச்சாளரை எதிர்கொண்டு விளையாட வெறுக்கிறீர்கள்? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கேஎல்.ராகுல் புன்னகையத்தப்படியே முகமது ஷமி என்று கூறினார். மேலும் ஒட்டுமொத்தமாக ஷமியின் 31 பந்துகளை சந்தித்து 21 ரன்கள் மட்டும் எடுத்து இரண்டு முறை ஆட்டம் இழந்து இருக்கிறார்.
இதையும் படிங்க : இந்தியாதான் இங்கிலாந்தின் அந்த பிரச்சனையை வெளியே காட்டுச்சு.. உதாரணமாக ஹர்திக் இருக்கார் – டேரன் காப் பேட்டி
மேலும் விளையாடுவதற்கு மிகவும் கடினமாக இருந்த பந்துவீச்சாளர் யார் என்ற கேள்விக்கு ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் என்று கூறியிருக்கிறார். இவருடைய பந்துவீச்சில் ஒட்டுமொத்தமாக 47 பந்துகளைச் சந்தித்து 40 ரன்கள் மட்டும் எடுத்து மூன்று முறை ஆட்டம் இழந்து இருக்கிறார்.