இந்தியாதான் இங்கிலாந்தின் அந்த பிரச்சனையை வெளியே காட்டுச்சு.. உதாரணமாக ஹர்திக் இருக்கார் – டேரன் காப் பேட்டி

0
237
Gough

இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டேரன் காப் இங்கிலாந்து அணியின் பலவீனம் வெளிப்பட்டது எப்படியானது? என்பது குறித்து கவலை தெரிவித்து இருக்கிறார். மேலும் இங்கிலாந்து அணியின் தற்போதைய தடுமாற்றத்திற்கான முக்கிய காரணம் குறித்தும் பேசியிருக்கிறார்.

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 351 ரன்கள் முதலில் பேட்டிங் செய்து குவித்தும், பந்துவீச்சில் சிறப்பாக செயல்படாத காரணத்தினால் நட்சத்திர வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்தது. இதன் காரணமாக தற்போது அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

- Advertisement -

இந்திய சுற்றுப்பயணத்தில் சர்ச்சை

சமீபத்தில் ஜோஸ்பட்லர் தலைமையில் வெள்ளை பந்து தொடர்களில் விளையாடுவதற்கு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்த இங்கிலாந்து அணி முதலில் நான்குக்கு ஒன்று என டி20 தொடரை இழந்தது, அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுவதுமாக இழந்தது. அந்த அணியின் ஆட்ட அணுகுமுறை மிகவும் சாதாரணமாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடுவதற்கான சரியான அணுகுமுறையை அவர்களிடம் பார்க்க முடியவில்லை.

மேலும் இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் தவிர மற்ற யாருமே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டிக்குப் பிறகு பயிற்சியில் ஈடுபடவில்லை என்கின்ற அதிர்ச்சி செய்தியை ரவி சாஸ்திரி வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து கெவின் பீட்டர்சன் கடுமையான முறையில் இங்கிலாந்து அணியை விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் பலவீனம்

இங்கிலாந்து அணி பற்றி பேசி இருக்கும் டேரன் காப் கூறும் பொழுது “இங்கிலாந்து அணியை பற்றி நான் என்ன சொல்வது? அந்த அணி மிகவும் முரணாக இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு பந்துவீச்சில் ஒரு நல்ல திட்டம் இருப்பதாக தெரியவில்லை. அவர்களிடம் மூன்று முழுமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஷார்ட் பந்து திட்டத்தை வைத்து செல்ல முடியாது. இந்த திட்டம் பலிக்காது என்பதை இந்தியாவில் வைத்து நாங்கள் தெரிந்து கொண்டோம். இந்தத் திட்டத்திற்கான காலம் போய்விட்டது. இதன் காரணமாக முதல் போட்டியில் 350 ரன் எடுத்தும் இங்கிலாந்து தோற்றது”

இதையும் படிங்க : பழைய வெஸ்ட் இண்டீஸ் தெரியுமா?.. பாகிஸ்தான் அணியின் உண்மை பிரச்சனை இதுதான் – சுனில் கவாஸ்கர் பேச்சு

“தற்போது இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது அந்த அணியை காயப்படுத்தி இருக்கிறது. அவர் இங்கிலாந்து அணிக்கு கிரிக்கெட்டின் மூன்று துறைகளிலும் பெரிய பங்களிப்பை கொடுக்க கூடியவர். உதாரணமாக அவர் இல்லாதது ஹர்திக் பாண்டியா இல்லாமல் போனால் இந்திய அணிக்கு எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -