ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த கேஎல் ராகுல் தன்னுடைய பேட்டிங் வரிசை பற்றி வித்தியாசமான பதிலை அளித்திருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற இருக்கிறது.
உங்களிடம் சொல்ல மாட்டேன்
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கேஎல் ராகுல் பேசும் பொழுது “நான் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் விளையாடுவேன் என்று என்னிடம் சொல்லப்பட்டு விட்டது. ஆனால் அதை உங்களிடம் கூறக்கூடாது என்று என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். போட்டிக்கு முன்பாக கேப்டன் ரோஹித் சர்மா உங்களை சந்திக்கும் பொழுது அல்லது விளையாட வரும் பொழுது தெரிய வரும்”
“நான் நியூசிலாந்து தொடரை தவற விட்டேன் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட வில்லை. எனக்கு அப்பொழுதே சொல்லப்பட்டு விட்டது. நான் தயாராக இருக்கும்படியும் எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு இருக்கும் என்றும் கூறினார்கள். இதன் காரணமாக எனக்கு நல்ல பேட்டிங் பயிற்சி நேரம் கிடைத்தது. மேலும் இங்கு ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராகவும் நான் விளையாடியது தயாராக உதவியது”
ஜெய்ஸ்வாலுடன் விளையாடுவது இப்படிதான்
“நாங்கள் இருவரும் இதற்கு முன்னால் ஒன்று சேர்ந்து விளையாடியது கிடையாது. நாங்கள் ஒன்றாக இணைந்து விளையாடுவதற்கு முன்பு எங்களுக்கு அதிக நேரம் இல்லை. ஆனால் பயிற்சியின் போது நாங்கள் சில விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டோம். நான் ஆஸ்திரேலியா அனுபவத்தை அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து கொள்வதையும், அவரை அமைதியாக வைத்திருப்பதையும் செய்தேன்”
இதையும் படிங்க : நான் 10 ஆண்டுகளாக தோனியுடன் பேசுவதில்லை.. பின்னணி காரணம் இதுதான் – ஹர்பஜன் சிங் பேட்டி
“நான் விளையாடும் அணியில் இருக்க விரும்புகிறேன். அணிக்காக விளையாடிய ரன்கள் எடுக்க விரும்புகிறேன். நான் குறிப்பிட்ட சூழ்நிலையில் எப்படி ரன்கள் எடுக்க முடியும் என்று பார்க்கிறேன். அதிர்ஷ்டவசமாக நான் வெவ்வேறு நிலைகளில் பேட்டிங் செய்திருக்கிறேன். ஆரம்பத்தில் என்னிடம் வெவ்வேறு இடங்களில் பேட்டிங் செய்ய கேட்ட பொழுது அது எனக்கு சவாலாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.