கிண்டலடித்த கமெண்டேட்டர்.. 2 நொடியில் தரமான பதிலடி கொடுத்த கேஎல் ராகுல்.. தல தோனி பாணியில் கலக்கல்.!

0
7319

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி சஞ்சு சாம்சனின் சதம் மற்றும் திலக் வர்மாவின் அரைசதம் காரணமாக 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்களை குவித்தது.

இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 45.5 ஓவர்களில் 218 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.

- Advertisement -

கடந்த முறை தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணி வந்த போது, கேஎல் ராகுல் தலைமையில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் கேஎல் ராகுல் இளம் படையுடன் வந்து வெற்றியை பெற்று மிரட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே கேஎல் ராகுல் மிகச்சிறந்த கேப்டன்சியை மேற்கொண்டிருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அட்டகாசமாக கேப்டன்சியை செய்திருந்தார். பெரிதாக எந்த வீரரையும் உடனடியாக மாற்றாமல் இளம் வீரர்களிடம் இருந்து எளிதாக வேலையை வாங்க கற்று கொண்டுள்ளார்.

அதேபோல் டிஆர்எஸ் அப்பீல் செய்வதில் தோனிக்கு இணையான வீரராக உருவெடுத்துள்ளார் கேஎல் ராகுல். நேற்றைய ஆட்டத்திலும் அப்படியான சம்பவம் நடைபெற்றது. 34வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தில் தென்னாப்பிரிக்கா அணியின் முல்டர் பேட்டில் லேசாக உரசி கேஎல் ராகுல் கைகளில் தஞ்சல் புகுந்தது.

- Advertisement -

அதேபோல் பந்தை பிடித்ததோடு மட்டுமல்லாமல் உடனடியாக ஸ்டம்பிங்கையும் கேஎல் ராகுல் செய்து நடுவரிடம் அவுட் என்று ஆக்ரோஷமாக அப்பீல் செய்தார். ஆனால் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் இரண்டுக்கும் நடுவர்கள் அவுட் கொடுக்கவில்லை. இதனை பார்த்து வர்ணனையில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவர், கேஎல் ராகுல் அவுட் என்பதில் உறுதியுடன் இருப்பதாக கூறினார். ஆனால் டிஆர்எஸ் கேட்பதற்கான நேரம் குறைந்து கொண்டே சென்ற போது, கேஎல் ராகுல் சிந்தனையில் இருந்தார்.

அப்போது மற்றொரு வர்ணனையாளர் உடனடியாக கேஎல் ராகுலின் உறுதி எங்கே போனது என்று கிண்டல் செய்தார். ஆனால் 2 நொடிகள் மீதமிருக்கையில் கேஎல் ராகுல் டிஆர்எஸ் அப்பீல் செய்தார். அதன் முடிவில் பந்து முல்டரின் பேட்டை உரசியது தெரிய வந்தது. இதையடுத்து கேஎல் ராகுலின் முடிவு சரியானது என்று ரசிகர்கள் பாராட்டினர். வர்ணனையில் கிண்டல் செய்தவருக்கு தோனி ஸ்டைலில் காத்திருந்து கேஎல் ராகுல் கொடுத்த பதிலடி ரசிகர்களிடையே ரசிக்கப்பட்டு வருகிறது.