ஹர்ஷித் ராணா நாங்க ரொம்ப நாளா தேடின வீரர்.. அவர் சிறப்பு வாய்ந்தவர்னு தெரியும் .. காரணம் இதுதான் – கேஎல் ராகுல் பேட்டி

0
123
Harshit

நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு ஹர்ஷித் ராணா பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது. இது குறித்து இந்திய கேப்டன் கேஎல்.ராகுல் பேட்டி அளித்திருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலி 120 பந்துகளில் 135 ரன்கள் எடுக்க, 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 332 ரன்கள் சேர்த்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

ஹர்ஷித் ராணா முன்னேற்றம்

தற்போது இந்திய அணிக்கு எல்லா வடிவத்திலும் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தேவையாக இருக்கிறார்கள். ஒரு வேகப்பந்து வீச்சாளராக சிறப்பாக இருக்க வேண்டும், அதே சமயத்தில் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யும் பொழுது 20 ரன்கள் எடுக்கக்கூடிய அளவுக்கு இருக்க வேண்டும். இதை நீண்ட நாட்களாக இந்திய அணி நிர்வாகம் தேடி வருகிறது.

இந்த நிலையில் ஹர்ஷித் ராணா மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவராக இருக்கிறார். மேலும் கீழ் வரிசை பேட்டிங்கில் ஓரளவுக்கு ரன்கள் எடுக்க முடிந்தவராகவும் இருக்கிறார். நேற்றைய போட்டியில் ஒரே ஓவரில் ரிக்கல்டன் மற்றும் குயின்டன் டி காக் இருவரையும் ஒரே ஓவரில் வெளியே அனுப்பி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

நாங்கள் தேடிய வீரர்

இதுகுறித்து கேஎல்.ராகுல் பேசும் பொழுது “ஹர்ஷித் ரானா மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு திறமை இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எங்கள் டிரெஸ்ஸிங் ரூமுக்கு அவர் வந்ததுமே அவர் சிறப்பு வாய்ந்தவர் என்பதை அறிந்தோம். அவரைத்தான் டீம் இந்தியா தேடிக் கொண்டிருந்தது. உயரமானவர் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடியவர். மேலும் கீழ்வரிசை பேட்டிங்கில் ரன்கள் எடுக்க முடிந்தவர்”

இதையும் படிங்க : தயவு செஞ்சு விராட் கோலியை பற்றி இப்படி பேசுவதை நிறுத்துங்க.. அவர் இப்போ இந்தியாவிலேயே இல்ல – இர்பான் பதான்

“அவர் தற்போது வளர்ந்து வரும் வீரர்தான். ஆனால் அவரிடம் நாங்கள் சிறந்த திறனை பார்க்கிறோம். அவரால் என்ன செய்ய முடியும் என்பதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அவர் சிறப்பாக செயல்பட்டார். புதிய பந்தில் விக்கெட் எடுப்பதுதான் அவருடைய வேலை. அவர் அந்த வேலையை செய்வதை பார்ப்பது சிறப்பாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -