20 வயது விப்ராஜ் கலக்கல்.. ரோஹித் பொல்லார்ட் சாதனை உடைப்பு.. ஆனால் டெல்லிக்கு நடந்த சோகம்.. புள்ளி பட்டியலில் மாற்றங்கள்

0
423
Vipraj

இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கே கே ஆர் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. காரணமாக தற்போது புள்ளி பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில் மற்ற அணிகளுக்கும் ப்ளே ஆப் சுற்றிற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த கேகேஆர் அணிக்கு ரகுவன்சி 32 பந்தில் 44 ரன்கள், ரிங்கு சிங் 25 பந்தில் 36 ரன்கள், சுனில் நரைன் 16 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் ஸ்டார்க் 3, விப்ராஜ் மற்றும் அக்சர் படேல் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

வெற்றியை கோட்டை விட்ட டெல்லி

இதைத்தொடர்ந்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல் அணி 13 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்து நரைன் பந்துவீச்சில் அக்சர் படேல் 43 (23) பாப் டு பிளேசிஸ் 62 (45), ஸ்டப்ஸ் 1 (3) ரன்கள் என வெளியேறினார்கள். இதைத்தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் அசுதோஸ் சர்மா மற்றும் ஸ்டார்க் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இந்த நிலையில் இரண்டு ஓவர்களுக்கு 38 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, ஒரு முனையில் விப்ராஜ் நிகம் அதிரடியாக போராடினார். ஆனாலும் அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை. இறுதியாக அவர் 19 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சுனில் நரைன், 3 மற்றும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். முடிவில் 14 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணி வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இது கடைசி நான்கு போட்டியில் மூன்றாவது தோல்வியாகும்.

- Advertisement -

ரோகித் சர்மா பொல்லார்ட் சாதனை உடைப்பு

டெல்லி கேப்பிடல் அணி தற்போது பத்து போட்டிகளில் 12 புள்ளிகள் எடுத்து புள்ளிப் பட்டியலில் கொஞ்சம் கொஞ்சமாக முதலிடத்தில் இருந்து சரிந்து தற்பொழுது நான்காவது இடத்திற்கு வந்திருக்கிறது. கடைசி இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோற்றதால் அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பஞ்சாப் லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்புகள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அதிகரித்திருக்கிறது.

மேலும் மிகக் குறைந்த வயதில் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் குறைந்தபட்சம் இரண்டு விக்கெட் மற்றும் 30 ரன்கள் மேல் எடுத்தவர்கள் பட்டியலில் விப்ராஜ் நிகம் ரோஹித் சர்மா மற்றும் பொல்லார்டு ஆகியோரை தாண்டி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. ஒட்டுமொத்த சிஎஸ்கேவின் ரெக்கார்டை முறியடித்த முன்னாள் சிஎஸ்கே வீரர் ரகானே.. கேகேஆர் கேப்டனாக அசத்தல்.. KKR vs DC

குறைந்த வயதில் ஒரு போட்டியில் இரண்டு விக்கெட் மற்றும் 30+ ரன்கள்:

19 வயது 247 நாட்கள் – ரஷித் கான் (2018)
20 வயது 275 – விப்ராஜ் நிகம் (2025)*
20 வயது 330 – நிதிஷ் ரெட்டி (2024)
21 வயது 034 – அபிஷேக் சர்மா (2021)
22 வயது 006 – ரோஹித் சர்மா (2009)
22 வயது 344 – கீரன் பொல்லார்ட் (2010)

- Advertisement -