டி20யில் ஒரு பேட்ஸ்மேன் இதைச் செய்வது மிகப்பெரிய குற்றம் – டி20 கிரிக்கெட் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்துள்ள விளக்கம்

0
159
Shreyas Iyer

இந்திய வீரர்கள் மத்தியில் ஒரு டி20 தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்களை குவித்த வீரராக விராட் கோலி மட்டுமே இருந்து வந்தார். அவரது சாதனையை தற்போது இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் சமன் செய்திருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிராக தற்போது நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் குவித்து ஸ்ரேயாஸ் ஐயர் மொத்தமாக 204 ரன்கள் குவித்துள்ளார். முதல் போட்டியில் 57* ரன்கள், இரண்டாவது போட்டியில் 74* ரன்கள், மூன்றாவது போட்டியில் 73* ரன்கள் என தனது அதிரடியை தொடர் முழுக்க ஸ்ரேயாஸ் ஐயர் காட்டியுள்ளார்.

கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்

அதிரடியான ஃபார்மில் இருக்கும் அவர் ஐபிஎல் தொடரிலும் இதேபோல விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டுகளில் டெல்லி அணிக்காக விளையாடி வந்த அவர் இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாட போகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு கைப்பற்றியது. இதற்கு முன் டெல்லி அணியில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கேப்டனாக வழி நடத்தப் போகிறார் என்பது கூடுதல் தகவல்.

ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியை 2019 மற்றும் 2020ஆம் ஆண்டில் கேப்டனாக வழி நடத்தி இருக்கிறார்.2019ஆம் ஆண்டு அவரது தலைமையில் 7 ஆண்டுகள் கழித்து டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. பின்னர் 2020ஆம் ஆண்டு முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. கேப்டனாக நல்ல ரெக்கார்டு வைத்துள்ள அவர் கொல்கத்தா அணியை இந்த ஆண்டு சிறப்பாக வழிநடத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டி20 போட்டியில் டாட் பால் ஆடுவது தவறு

சமீபத்தில் பேசியுள்ள அவர் டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் ஒரு பேட்ஸ்மேன் முதல் பந்திலிருந்து தனது அதிரடியை வெளிப்படுத்த வேண்டும். டி20 கிரிக்கெட் போட்டியில் மொத்தமாகவே ஒரு அணிக்கு 120 பந்துகள் மட்டுமே இருக்கும் நிலையில், எந்த பந்தையும் வீணடிக்க கூடாது.

ஒரு பேட்ஸ்மேன் இந்த கிரிக்கெட் பார்மெட்டில் டாட் பால் ஆடுவது மிகப்பெரிய குற்றம். இந்த விஷயத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். அவர்கள் முதல் பந்திலிருந்தே தங்களுடைய ஆக்ரோஷத்தையும், அதிரடியும் வெளிப்படுத்துவார். அவ்வாறு அதிரடியாக ஆடினார் மட்டுமே இறுதியில் அணியின் ஸ்கோர் சிறப்பாக வந்தமையும். இவ்வாறு டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் பந்திலிருந்து அதிரடியாக விளையாட வேண்டும் என்று ஸ்ரேயாஸ் தனது கருத்தை கூறியுள்ளார்.