நரைன் டீம் மீட்டிங்ல கலந்துக்க மாட்டாரு.. எனக்கு ஐடியாவும் தர மாட்டாரு.. எல்லாம் சால்ட்தான்.. ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
2671
Shreyas

நேற்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி தங்களது சொந்த மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின் வெற்றிக்கான காரணங்கள் குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது அந்த அணிக்கு பிரச்சனைகளை உண்டாக்கியது. வழக்கமான கொல்கத்தா ஆடுகளம் போல் பேட்டிங் செய்ய சாதகமாக இல்லாமல், கொஞ்சம் ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்கும் உதவி இருந்தது.

- Advertisement -

ஆடுகளம் குறித்து சரியாக கனிக்காமல் விளையாடிய டெல்லி அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. அந்த அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 26 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது. கொல்கத்தா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 33 பந்தில் அதிரடியாக 68 ரன்கள் எடுக்க, அந்த அணி போட்டியை பவர் பிளேவிலேயே முடித்து விட்டது.

நேற்றைய போட்டியின் வெற்றிக்குப் பின் பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் “கடந்த சில போட்டிகளோடு ஒப்பிடும் பொழுது இந்த ஆடுகளம் 200 ரன்கள் எடுத்தால் சரியாக இருக்கும் என்பதாக இருந்தது. பவர் பிளேவுக்கு பிறகு ஆடுகளம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தது. ஆடுகளம் எப்படி செயல்படுகிறது அதை எப்படி சமாளிப்பது என எங்களுக்கு சில நல்ல யோசனைகள் கிடைத்தது. நரைன் இப்படியான கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. பில் சால்ட்தான் யோசனைகள் சொல்வார். நானும் நரைனை மீட்டிங் வரச் சொல்லி வற்புறுத்துவது கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : வெறும் ஒரு மேட்ச்.. கழட்டி விடப்பட்ட 5 நட்சத்திர வீரர்கள்.. ஐபிஎல் 2024-ல் சோகம்

வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் கடந்த சில போட்டிகளாக நன்றாக செயல்படவில்லை. ஆனால் அவர் எனக்கு ஆடுகளத்தை கணித்து நல்ல மதிப்பீடுகளை சொல்லுவார். இன்று அவர் திரும்பி வந்த விதம் அபாரமாக இருந்தது. நாங்கள் முதல் ஆட்டத்தில் இருந்தே எவ்வளவு சீக்கிரம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்று பார்த்து வருகிறோம். இப்போதைக்கு எங்களுடைய செயல்முறையில் கவனம் செலுத்தி, புள்ளி பட்டியலை பார்க்காமல் இருக்கப் போகிறோம்” என்று கூறியிருக்கிறார்.