இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு அணி ரசிகர்களும் தற்போது அந்த மெகா ஏலத்தை நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். தங்களுக்குப் பிடித்தமான அணி எந்தெந்த வீரர்களை மெகா ஏலத்தில் தேர்ந்தெடுக்க போகிறது என்பது குறித்து மிகுந்த ஆவலுடன் அவர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கொல்கத்தா அணி நிர்வாகம் சமூகவலைதளங்களில் அதன் ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. கொல்கத்தா அணியில் எந்த 11 வீரர்கள் விளையாடினால் நன்றாக இருக்கும் என்பது போல ஒரு போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களை கொண்டு ஒரு அணியை உருவாக்கி அதை கொல்கத்தா அணியின் நிர்வாக பக்கத்தை டேக் செய்து, கொல்கத்தா மாக் ஆக்ஷன் என்கிற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு ரசிகர்கள் கூறும் அனைத்து கருத்துக்களையும் கொல்கத்தா அணி நிர்வாகம் பரிசீலனை செய்து அதற்கு தகுந்தவாறு மெகா ஏலத்தில் வீரர்களை தேர்ந்தெடுக்கும் என்றும் உறுதி அளித்துள்ளது.
ஜானி பேர்ஸ்டோவை குறிவைக்கும் கொல்கத்தா அணி நிர்வாகம்
கொல்கத்தா அணி அதனுடைய பழைய வீரர்களான வெங்கடேச ஐயர், சுனில் நரைன் வருன் சக்கரவர்த்தி மற்றும் ஆண்ட்ரூ ரசல் ஆகியோரை தக்கவைத்துள்ளது. இந்த வீரர்கள் மத்தியில் ஓபனிங் வீரராக கடந்த ஆண்டு கொல்கத்தா அணியில் பட்டையை கிளப்பிய வெங்கடேஷ் இந்த ஆண்டும் ஓபனிங் இடத்தில் களம் இறங்குவார் என்று கொல்கத்தா அணி நிர்வாகம் உத்தரவாதம் அளித்திருக்கிறது.
தற்பொழுது வெங்கடேஷ் ஐயருடன் இணைந்து எந்த வீரர் ஓபனிங் விளையாடினால் நன்றாக இருக்கும் என்பது போல ஒரு கேள்வியை அந்த அணி நிர்வாகம் சமூகவலைதளத்தில் எழுப்பியிருந்தது. பலரும் டேவிட் வார்னர் அல்லது ஜானி பேர்ஸ்டோ விளையாடினால் நன்றாக இருக்கும் என்று தங்கள் பதிலை கூறினர்.
கொல்கத்தா அணி நிர்வாகத்தின் அட்மின் இந்த இரு பதில்களுக்கும் தன் எதிர் பதிலை அளித்துருந்தார். ஒரு ரசிகர் கூறிய ஜானி பேர்ஸ்டோ என்ற பதிலுக்கு, ” இடது மற்றும் வலது கை காம்பினேஷன் மிக அற்புதமாக இருக்கும்” என்பது போல கூறியிருந்தார். ஆனால் மற்றொரு ரசிகர் கூறிய டேவிட் வார்னர் பதிலுக்கு பெரிதும் ஆர்வம் காட்டாமல், “அது நன்றாக தான் இருக்கும். இந்த பதிலை ஹேஷ்டேக் ( கொல்கத்தா மாக் ஆக்ஷன் ) மூலியமாக கூறி விட்டீர்களா” என்று கேட்டிருந்தார்.
KKR Reply to Fan who wants David Warner and Jonny Bairstow in KKR team pic.twitter.com/JAc66exdpE
— Behind Cricket (@behindCric8) January 31, 2022
அட்மின் கூறிய இந்த இரண்டு பதிலையும் ஒப்பிட்டு பார்த்தால் கொல்கத்தா அணி நிர்வாகம் ஜானி பேர்ஸ்டோ மீது ஒரு கண் வைத்து விட்டது என்று நாம் நம்பலாம். எனவே ஜானி பேர்ஸ்டோவை மெகா ஏலத்தில் கொல்கத்தா அணி நிர்வாகம் கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் கொல்கத்தா அணி நிர்வாகம் இறுதி நேரத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.