2023 சிஎஸ்கே செஞ்சத மறக்கவே முடியாது.. எல்லாமே என் தலையெழுத்து.. 100க்கு 95 முறை – மோகித் சர்மா பேட்டி

0
265
Mohit

முன்னாள் குஜராத் டைட்டன்ஸ் வீரரும் தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டிருக்கும் மோகித் சர்மா 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்

அப்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய மோகித் சர்மா இறுதி ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசி இரு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா ஐந்தாவது பந்தில் சிக்சர் மற்றும் ஆறாவது பந்தில் பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணியை திரில்லிங் வெற்றி பெற வைத்தார். இந்த தோல்வி ஒட்டுமொத்த குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் ரசிகர்களை பாதித்தது.

- Advertisement -

அப்போது நடந்ததுதான் தலைவிதி

இதுகுறித்து பேசி இருக்கும் மோகித் சர்மா கூறும் பொழுது ” அந்த இறுதிப் போட்டிகள் நாங்கள் தோல்வி அடைந்த பிறகு கேப்டன் ஹர்திக் பாண்டியா, கோச் ஆசிஸ் நெக்ரா மற்றும் விக்ரம் சோலங்கி என அனைவருமே அது நம்முடைய தலைவிதியில் இல்லை என்று கூறினார்கள். நாங்கள் இப்படி நூறு போட்டிகளில் விளையாடினால் 95 போட்டிகளில் வெற்றி பெற்று இருப்போம். அன்று நடந்த போட்டி நாங்கள் தோல்வி அடையும் ஐந்து போட்டிகளில் ஒன்றாக அமைந்துவிட்டது. அதுதான் தலைவிதி அதை நாம் குற்றம் சொல்ல முடியாது”

“எனவே என் கையில் இருப்பதை நான் செய்கிறேன். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு இங்கு உங்களை ஒருவர் தோற்கடிக்க முடியாது, ஒருவர் உங்களை வெல்லவும் வைக்க முடியாது. யாராவது ஒருவர் வந்து நான் குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து விட்டதாக கூறினால், நான் அந்த தொடர் முழுக்க செயல்பட்டு இருந்த விதத்தை அவருக்கு காட்டுவேன்”

- Advertisement -

டெல்லி காகிதத்தில் சிறப்பானது

மோகித் சர்மா தற்போது விளையாடும் டெல்லி கேப்பிடல்ஸ் பற்றி பேசும்பொழுது “தற்போது நாங்கள் பேப்பரில் நல்ல அணியாக தெரிகிறோம். தங்கள் களத்திற்கு சென்று எங்களுடைய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை அறிவோம். மேலும் நாம் பேப்பரில் இருக்கும் அணியை வைத்து எதை முடிவு செய்யக்கூடாது. ஏனென்றால் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலை. மொத்தமாக எல்லா அணிகளையும் எடுத்து பார்த்தால் பேப்பரில் அனைவரும் சிறந்தவர்களாக தெரிவார்கள்”

இதையும் படிங்க : ஐபிஎல் ஏப்ரல் 25.. உலகின் முதல் வீரராக தோனி படைக்க இருக்கும் பிரம்மாண்ட சாதனை – முழு தகவல்கள்

“ஒருவர் எவ்வளவு பெரிய பெயர் கொண்ட வீரராக இருந்தாலும் அவர் தன்னுடைய திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் மட்டுமே பெரிய வீரராக இருக்க முடியும். தற்போது எங்களுடைய மிடில் ஆர்டர் இந்திய வீரர்கள் கொஞ்சம் பலவீனமாக தெரியலாம். ஆனால் இவர்களால் போட்டியை வெல்ல முடியும். உங்களுக்கு ஐபிஎல் தொடரின் முதல் 10 நாட்கள் மிகவும் முக்கியமானது. நாங்கள் ஒரு யூனிட் ஆக வெளியில் வந்து எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும்” என்பதை பார்ப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -