“ஒருமுறை கப் அடிச்சிட்டு…!” எப்போது ஓய்வு என்று ரெய்னாவிடம் வெளிப்படையாகச் சொன்ன தோனி – உண்மையை உடைத்த ரெய்னா!

0
2892
Raina

நடப்பு ஐபிஎல் தொடர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு அணிகளின் சொந்த மைதானங்களுக்கு திரும்பி இருக்கிறது.

ஆனால் இதில் ஒரே ஒரு விதிவிலக்காக எல்லா மைதானங்களிலும் ஒரு வீரருக்காக ரசிகர்கள் பெரிய அளவில் திரண்டு மைதானத்திற்கு வருகிறார்கள். அந்த வீரர் மகேந்திர சிங் தோனி!

- Advertisement -

மகேந்திர சிங் தோனி அவர்களின் கடைசி ஐபிஎல் தொடர் இதுதான் என்கின்ற கணிப்பு நிறைய பேரிடம் இருக்கிறது. எனவே அவர் மைதானத்தில் விளையாடுவதை ஒரு முறை பார்த்து விட ரசிகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

இதன் காரணமாக ஒவ்வொரு மைதானத்திற்கு வெளியேவும் சிஎஸ்கே ஜெர்சியும் தோனியின் ஜெர்சியும் விற்கப்படுகிறது. சிஎஸ்கே எந்த மைதானத்தில் விளையாடினாலும் அங்கு மஞ்சளே ஆக்கிரமிக்கிறது.

இந்த நிலையில் கடந்த போட்டியின் போது தொகுப்பாளர் டானி மோரீசன் மகேந்திர சிங் தோனியிடம் அவரது கடைசி ஐபிஎல் தொடர் இதுதான் என்று பேச, அதற்கு மகேந்திர சிங் தோனி நீங்கள்தான் இப்படி சொல்கிறீர்கள், நான் என்னுடைய கடைசி ஐபிஎல் தொடர் என்று சொல்லவில்லை என்று கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

தற்பொழுது, மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி கீழ் இந்திய அணியிலும் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் இணைந்து மிக வெற்றிகரமாக விளையாடிய சுரேஷ் ரெய்னா மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து மிக முக்கிய கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து பேசி உள்ள சுரேஷ் ரெய்னா
” மகேந்திர சிங் தோனி என்னிடம் ஓய்வு குறித்து சொன்னது ஒரு முறை கோப்பையை வென்று விட்டு இன்னும் ஒரு வருடம் சேர்த்து விளையாட வேண்டும் என்பதுதான்!” என்று தெரிவித்திருக்கிறார்.

இதன்படி பார்த்தால் மகேந்திர சிங் தோனி கோப்பையை வெல்ல மிக ஆர்வமாக இருப்பதும். அதற்கு அடுத்து ஒரு வருடம் சேர்த்து விளையாட இருப்பதும் தெரிய வருகிறது.