இப்படி ஒரு ஷாட்.. என் வாழ்நாளில் பார்த்ததில்லை.. ரஹானேவுக்காக சில்லறையை சிதறவிட்ட பீட்டர்சன்!

0
2916

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ரஹானேவை ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த அணியும் அவர் பெயர் வந்ததும் வாங்க தயக்கம் காட்டியது.ஆனால்  சிஎஸ்கே மட்டும் 50 லட்சம் ரூபாய்க்கு அடிப்படை விலை தொகைக்கு ரஹானேவை வாங்கியது. எனினும் சிஎஸ்கே  அவரை முதல் சில போட்டிகளில் விளையாட வைக்கவில்லை.

ஆனால் அதன் பிறகு ஏன் அந்த தவறை செய்தோம் என சிஎஸ்கே நிர்வாகமே நினைக்கும் அளவிற்கு புதிய அவதாரம் எடுத்தார் ரஹானே. எந்திரன் படத்தில் சிட்டி 2.0 என ரோபோ புத்துயிர் பெற்று வருவது போல் ரஹானே தன்னைத்தானே செதுக்கி கொண்டு சிறந்த டி20 வீரராக களத்தில் ஜொலித்து வருகிறார்.

- Advertisement -

சிஎஸ்கேவுக்காக தற்போதைய சீசனில் ரஹானே 200 ஸ்டிரைக் ரேட்டுக்கு குறையாமல் விளையாடி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு சீசனில் ராபின் உத்தப்பா சிஎஸ்கேவுக்காக எந்த பணியை செய்தாரோ அதைவிட சிறப்பாக செய்து கெத்து காட்டி வருகிறார். இதில் ஹைலைட்டான இன்னிங்ஸ் நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக ரஹானே ஆடிய ஆட்டம் தான்.

200 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என குறிக்கோளுடன் களத்தில் இறங்கிய ரஹானே. ஐந்து இமாலய சிக்ஸர் மற்றும் ஆறு பவுண்டரிகள் அடித்தார். இதன் மூலம் 29 பந்துகளில் ரஹானே 71 ரன்களை விளாசினார். ரஹானே, டிராவிட் போன்று கிரிக்கெட் புத்தகத்தில் ஷாட் எப்படி ஆட வேண்டும் என்று எழுதி இருக்கிறதோ அதனை அப்படியே ஆடக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் ஆக தான் கருதப்பட்டார்.

ஆனால் இந்த பிம்பத்தை எல்லாம் நேற்று சுக்குநூறாகனை உடைத்தார். வேகப்பந்துவீச்சாளர் குல்வந்த் வீசிய ஓவரில் ரஹானே ரிவர்ஸ் ஸ்குப் சாட் ஆடி சிக்ஸருக்கு பந்தை பறக்க விட்டார். இதை பார்த்ததும் ரஹானே வா இப்படி விளையாடுகிறார் என ரசிகர்கள் ஆச்சரிய கடலில் மூழ்கினர். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், என் வாழ்நாளில் இப்படி ஒரு சிறந்த ஷாட்டை நான் பார்த்ததில்லை.

- Advertisement -

ரகானே தொடர்ந்து எங்களை உற்சாகப்படுத்துங்கள் சகோ என பாராட்டியுள்ளார்.ரஹானே வின் இந்த அபார ஆட்டம் மூலம் அவருக்கு விரைவில் இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் கிடைத்துவிடும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

ரஹானே இந்த அளவுக்கு அதிரடியாக ஆடினால் அவரை ஒருநாள் போட்டியில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
எனினும் தமது ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஹானே, இது வெறும் ட்ரைலர் தான் இன்னும் என்னுடைய சிறந்த ஆட்டம் நான் வெளிப்படுத்தவில்லை என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.