ரொம்ப மோசமா பேசாதீங்க.. நீங்க பண்ணது தப்பு.. இந்திய தொடர் குறித்து டக்கட் பேசியதற்கு கெவின் பீட்டர்சன் விமர்சனம்

0
1858

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை நோக்கி தற்போது விளையாடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணி தொடக்க வீரர் பென் டக்கட் இந்திய தொடர் குறித்து பேசியதற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

எனக்கு கவலை இல்லை

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து முதலில் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியடைந்தது. அதற்குப் பின்னர் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரையும் இழந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட் இந்திய அணிக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தாலும் கவலை இல்லை எனது இலக்கு சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவது ஆகும் என்று கூறியிருக்கிறார்.

அவர் இப்படி கூறியது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தினால் சொந்த நாட்டுக்கு எதிரான தொடரில் தோல்வி அடைந்தால் பரவாயில்லையா? என அவர் மீது தற்போது விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

அவர் பேசியது ரொம்ப தப்பு

இது குறித்து அவர் கூறும் பொழுது “இங்கிலாந்து அணி இன்று தோற்றாலும் இந்திய அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோற்றாலும் தனக்கு கவலை இல்லை என்று டக்கட் பேசியிருப்பது மோசமானது. மேற்கோள்களை படிக்கும்போது ஒரு சூழல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் டக்கட் அந்த வார்த்தைகளை ஒருபோதும் சொல்லியிருக்கக் கூடாது. இவை மோசமான விஷயமாகும்” என்று கெவின் பீட்டர்சன் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க:கருப்பு பேட்ஜ் தான கட்டுவாங்க.. அது என்ன புதுசா கலர் பேட்ஜ்.? வெளிவந்த ரகசியம்.. இங்கி 3வது ஒருநாள்

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக நான்கு ஒரு நாள் தொடர்களில் தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இங்கிலாந்து வீரரே இது போன்ற கருத்துக்களை கூறியிருப்பது அது அணியின் சூழ்நிலையை பாதிக்கக் கூடிய விஷயமாகும் என்று கருத்துக்கள் வெளி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 356 ரன்கள் நிர்ணயித்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி சற்று முன் வரை 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

- Advertisement -