இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நான்கு நாட்கள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் மூன்றாவது ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்த நிலையில் 135 ரன்கள் பின்தங்கி உள்ளது. நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 192 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய அணியில் கேஎல் ராகுல் மட்டும் ஒரு முனையில் போராட மறுமுனையில் மூன்று விக்கெடுகள் விரைவாக இழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் மனது வைத்தால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற முடியும் எனவும் ஜோப்ரா ஆர்ச்சர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராகவில்லை எனவும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு அதிகம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஜோப்ரா ஆர்ச்சர் இன்னும் டெஸ்ட் போட்டிக்கு முழுமையாக தயாராகவில்லை என்பதை கூறுவதற்கு நான் வருந்துகிறேன். முதல் இன்னிங்ஸ் அவர் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். 58/4 என்ற நிலையில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரைடன் கார்ஸ் இருவர் மட்டுமே சரியான நீளத்தை கண்டறிந்துள்ளனர்.
இதையும் படிங்க:களத்தில் மோதி கொண்ட் பென் டக்கட், சிராஜ்.. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து.. வெல்லுமா இந்தியா?
இந்த நேரத்தில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இது ஒரு பெரிய கணிப்பு. இருப்பினும் இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளது என்று தோன்றுகிறது. ஆனால் இந்த ஆட்டத்தை இந்திய அணிக்கு சாதகமாக மாற்ற கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நினைத்தால் மட்டுமே முடியும்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.






