இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி புரூக் இந்திய சுழல் பந்துவீச்சை எதிர்த்து விளையாடுவது குறித்து வெளியிட்டிருந்த ஒரு கருத்துக்கு கெவின் பீட்டர்சன் சரியான பதிலடி உடன் அறிவுரை கூறியிருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய சுழல் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட முடியாமல் டி20 தொடரில் தடுமாறி வருகிறார்கள். கொல்கத்தா மற்றும் சென்னையில் நடந்த முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியாமல் தோல்வியடைந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி நிர்வாகத்தின் திட்டம்
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய அணி நிர்வாகம் தங்களுக்கு எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யவும் அதே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் பந்து வீசவும் ஒரு ஆல்ரவுண்டர் தேவை என்பதில் உறுதியாக இருக்கிறது.
மேலும் குறைந்தபட்சம் தங்களது பிளேயிங் லெவனில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. இரண்டாவது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் உடன் நான்கு பிரதான முழு சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் அந்தப் போட்டியில் ஐந்தாவது சுழல் பந்துவீச்சாளராக பகுதிநேர அபிஷேக் ஷர்மா பந்து வீசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹாரி புரூக் வெளியிட்ட கருத்து
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ஹாரி புரூக் கொல்கத்தாவில் புகைமூட்டமாக இருந்ததால் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சை தன்னால் கணித்து விளையாட முடியவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் சென்னையில் அப்படி எதுவும் இல்லாமல் காற்று தெளிவாக இருந்த பொழுதும் அவர் மீண்டும் வருண் சக்கரவர்த்தி பந்தை கணிக்க முடியாமல் ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : ரோகித் விராட் பேட்டிங்க மாத்தணும்.. அந்த டைம்ல அத செய்வேன் – புது பேட்டிங் கோச் பேட்டி
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது “பாஸ்பால் அணுகுமுறை தொடர்ந்து உயர்தர சுழல் பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக சிறப்பாக செயல்பட முடியாது. துணைக் கண்டத்தில் ஸ்பின் விளையாடுவதற்கு என்று ஒரு கலை இருக்கிறது. அதை கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார். மேலும் சென்னையில் புகையில்லாத பொழுதும் ஹாரி புரூக் எதையும் செய்ய முடியவில்லை என்பதையும் நகைச்சுவையாக சுட்டி காட்டி இருக்கிறார்!






