இந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் சௌராஷ்டிரா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சிதான்சு கோடக் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பேட்டிங்கில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து பேசி இருக்கிறார்.
தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் புதியதாக பேட்டிங் பயிற்சியாளர் சேர்க்கப்பட்டிருக்கிறார். அபிஷேக் நாயர் பேட்டிங் பயிற்சியில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் கற்றுக்கொள்ள தயாராக இருக்கணும்
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் நேற்று இந்திய அணி புதிய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் தனது முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்டார். இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து மிக முக்கியமான விஷயங்களை அவர் மிகவும் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து சிதான்சு கோடக் கூறும்பொழுது “இந்த விளையாட்டு இப்படித்தான் செல்கிறது. நீங்கள் எப்பொழுதும் மனதை திறந்து வைத்து கற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். அவர்கள் இப்படியான மனநிலையில் இருக்கும் பொழுது, அவர்கள் ஏதாவது உள்ளீடுகளை எடுத்துக் கொள்ள தயாராக இருக்கும்பொழுது, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிடம் கூறுவதற்கு எனக்கு சில விஷயங்கள் இருக்கின்றன. அப்போது நான் அவர்களிடம் இதைச் சொல்வேன். அது சரியான நேரத்தில் அவர்கள் தயாராக இருக்கும்போது சொல்ல வேண்டும்”
நானும் கற்றுக்கொள்ள வேண்டும்
“பாருங்கள் உண்மையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மிகப்பெரிய வீரர்கள். தற்போது இருக்கும் வீரர்களிடம் கூட நாம் எல்லாவற்றையும் கூற முடியாது. அவர்கள் தங்கள் விளையாட்டை எவ்வாறு திட்டமிடுகிறார்கள்? அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை புரிந்து கொண்டு நாம் அதில் ஏதாவது சேர்க்க முடியுமா? என்று பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க : விராட் கோலி ரோஹித் சர்மா விஷயத்துல.. வரலாறே இதைத்தான் சொல்லுது.. ரொம்ப நாள் போகாது – இங்கி ஜேம்ஸ் வின்ஸ்
“என்னால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பேட்டிங்கில் மூன்று சதவீதம் அல்லது ஐந்து சதவீதம் மதிப்பை கூட்ட முடிந்தால், அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் விளையாடிய கிரிக்கெட்டின் அளவு மற்றும் தரத்திற்கு அது சரியானதாக இருக்காது. அவர்களுக்கு பெரிய விஷயங்கள் கூற வேண்டிய தேவை இருக்காது. நானும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






