இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என கெவின் பீட்டர்சன் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை நாக்பூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 9 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற்று இந்த தொடர் முடிவுக்கு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக இந்த தொடர் இரு அணிகளுக்கும் சிறந்த பயிற்சி தொடராக அமையும்.
வருண் சக்கரவர்த்தியை வைத்து மாஸ்டர் பிளான்
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு ஐந்து விக்கெட் உள்பட வருண் சக்கரவர்த்தி மொத்தம் 14 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார். அவரது பந்தை கணிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். டி20 தொடரை இந்திய அணி வெல்வதற்கு வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் தனி ஒரு வீரராக பெரிய தாக்கத்தை செலுத்தினார்.
இதன் காரணமாக திடீரென இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதில் அவர் விளையாடுவதற்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதில் அவர் சிறப்பாக செயல்பட்டால் அவரை சாம்பியன்ஸ் டிராபிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து இருப்பதாகவும் தெரிய வருகிறது. ஏற்கனவே நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் நீக்கப்பட வாய்ப்புகள் உண்டு.
வருண் சக்கரவர்த்தி பிரச்சனை இல்லை
இதுகுறித்து பேசி இருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது “வருண் சக்கரவர்த்திக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பான முறையில் செயல்படுவார்கள். ஏனென்றால் அவருக்கு எதிராக விளையாடுவதற்கு அதிக ஓவர்கள் அவர்களிடம் இருக்கும். இது நீண்ட வடிவ கிரிக்கெட். எனவே ஒவ்வொரு பந்தும் மிகவும் முக்கியமானது கிடையாது. ஆனாலும் வருண் சக்கரவர்த்தியை இந்திய அணியில் சேர்த்திருப்பது நல்ல முடிவு”
இதையும் படிங்க : விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யும் கம்மின்ஸ் விளம்பரம்.. அவருக்கே திருப்பி நடந்த சோகம் – சாம்பியன்ஸ் டிராபி திருப்பம்
“இங்கிலாந்தின் பார்வையில் டி20 தொடர் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் ஒரு தொடராக அமைந்திருக்கிறது. ஆனால் நான்காவது போட்டியில் சிவம் துபேவுக்கு சரியான மாற்றுவீரர் அளிக்கப்பட்டிருந்தால் இங்கிலாந்து அணி நிச்சயம் எழுந்திருக்கும். தொடர் இரண்டுக்கு இரண்டு என சமநிலை ஆகியிருக்கும். இதன் காரணமாக மும்பையில் நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் இந்திய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கும். இங்கிலாந்து அணி வென்று இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.