விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யும் கம்மின்ஸ் விளம்பரம்.. அவருக்கே திருப்பி நடந்த சோகம் – சாம்பியன்ஸ் டிராபி திருப்பம்

0
267
Cummins

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான விளம்பரத்தில் பேட் கம்மின்ஸ் செய்துள்ள விஷயமும் பிறகு அவருக்கு நடந்துள்ள சோகமான விஷயமும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்றி அதே சமயத்தில் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

தற்போது ஆஸ்திரேலியா அணி ஸ்மித் தலைமையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் விளையாடி வருகிறது. காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி விளம்பரம்

இந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி துவங்க இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதில் ஒரு விளம்பரத்தில் தோன்றும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்வது போல காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த விளம்பரத்தில் கம்மின்ஸ் ஷேவிங் செய்யும் பொழுது கண்ணாடியை பார்த்தபோது விராட் கோலி களமிறங்கும் பொழுது அவரது மன உறுதியை எப்படி உடைக்கலாம் என்று பயிற்சி எடுக்கிறார். அப்பொழுது கம்மின்ஸ் ” விராட் கோலி நீங்கள் மெதுவாக பேட் செய்து நான் பார்த்ததில்லை. மெதுவாக மெதுவாக” என்று ஸ்லெட்ஜ் செய்வதுபோல இருந்தது. இது ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்தது என்று கூறலாம்.

- Advertisement -

கம்மின்ஸ்க்கு ஏற்பட்ட சோகம்

இந்த நிலையில் வெளிவந்திருக்கும் இன்னொரு செய்தியில் காலில் ஏற்பட்ட காயம் கொஞ்சமும் சரியாகாமல் இருக்கின்ற காரணத்தினால் நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் விளையாடுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் புதிய கேப்டனை தேர்வு செய்ய யோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : ரோகித்துக்கு பிசிசிஐ அனுப்பிய எச்சரிக்கை.. விராட் தற்காலிகமாக தப்பினார் – வெளியான தகவல்கள்

இதுகுறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் கூறும்பொழுது ” கம்மின்ஸ் மீண்டும் பந்துவீச்சை தொடங்க மிகவும் சிரமப்படுகிறார். அவரால் கொஞ்சமும் பந்து வீச முடியவில்லை. இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் இல்லை. எனவே தற்போது எங்களுக்கு ஒரு புதிய கேப்டன் தேவை. ஸ்மித் மற்றும் ஹெட் இருவரில் யாரை கேப்டனாக கொண்டு வரலாம் என்று நாங்கள் ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -