கம்பீர் என்னை பற்றி விமர்சனம் பண்ணியது சரிதான்.. நான் அந்த மாதிரிதான் – கெவின் பீட்டர்சன் ஒப்புதல்

0
135
Gambhir

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறி இருந்தது. இதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது நிறைய விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் அவர் மீது விமர்சனத்தை முன்வைத்த ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் கெவின் பீட்டர்சன் மீது கவுதம் கம்பீர் தன் விமர்சனத்தை முன் வைத்திருந்தார். தற்போது இதை கெவின் பீட்டர்சன் ஏற்றுக்கொண்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

முதலில் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் கெவின் பீட்டர்சன் இருவரும் ஹர்திக் பாண்டியா நல்ல கேப்டன் கிடையாது என்று பேசி இருந்தார்கள். மேலும் ஏபி டிவில்லியர்ஸ் ஹர்திக் பாண்டியா தன்னை தோனி போல் காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார், ஆனால் அவருடைய இயல்பு அது கிடையாது என்பதாகவும் கூறியிருந்தார்.

- Advertisement -

ஏபி டி வில்லியர்ஸ் செய்த விமர்சனத்திற்கு வெளியில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் உருவானது. பிறகு அவர் தான் ஹர்திக் பாண்டியாவை தவறாக கூறவில்லை அவருடைய கேப்டன்சி துணிச்சல் பிடிக்கும் என்று நான் ஆரம்பத்திலேயே கூறியதை யாரும் கவனிக்கவில்லை, நான் கூட வீட்டில் அமைதியாக இருப்பேன் களத்தில் ஆக்ரோஷமாக இருப்பேன், உண்மையாக இருந்தது கிடையாது என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் கம்பீர் ஹர்திக் பாண்டியா மீதான இவர்களின் விமர்சனம் குறித்து பேசும்பொழுது, இந்த இருவருமே தங்களது கேப்டன் பொறுப்பில் பெரிதாக எதையும் செய்ததாக நினைக்கவில்லை என்றும், மேலும் ஏபி டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்ததில்லை என்றும், அவர் தன்னுடைய பேட்டிங் சாதனைகளை தவிர வேறு எதையும் செய்தது கிடையாது எனவும் விமர்சனம் செய்திருந்தார்.

இத்தோடு இன்று ஹர்திக் பாண்டியாவை விமர்சனம் செய்து கொண்டிருக்கும் எல்லோருமே, நாளை அவர் நன்றாக செயல்படும் பொழுது, அப்படியே மாற்றி அவரை பாராட்டுவார்கள் என்றும் கூறியிருந்தார். கம்பீர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக பேசிய பிறகு இந்த விவகாரம் இன்னும் சூடு பிடித்தது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் டீம் கேப்டன்கள்.. ஐபிஎல் ஏலத்துல கலந்துக்கனும்.. முக்கியமான காரணம் இதுதான் – கம்பீர் பேட்டி

தற்பொழுது கம்பீர் தன் குறித்து செய்த விமர்சனம் பற்றி கெவின் பீட்டர்சனிடம் கேட்கப்பட்டது. அவர் அது குறித்து கூறும்பொழுது “கம்பீர் தவறாக கூறவில்லை. உண்மையில் நான் ஒரு மோசமான கேப்டன்!” என்று அதை மிக வெளிப்படையாகவே ஏற்று எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். மேலும் அவருடைய இந்த பதிலால் இந்த பிரச்சனையும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.