நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஒன்றை பிடிப்பது உறுதியாக இருக்கிறது. அந்த அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாடும். இந்த நிலையில் அந்த அணியின் மென்டராக வந்திருக்கும் கவுதம் கம்பீர் பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
கம்பீர் பேசியதில் “நேர்மையாக நான் கேப்டன்சி தொடர்பாக யாரிடமும் எந்த அறிவுரையையும் கேட்டது கிடையாது. நான் என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து கேப்டனாக செயல்படுவதை பற்றி புரிந்து கொண்டேன். அனுபமாக பேசுவோம் அல்லது யாரையும் குறை சொல்லவோ இதை சொல்லவில்லை. ஆனால் நான் எனது அனுபவங்களால் மட்டுமே கேப்டன் ஆனேன்.
நான் கேப்டன் ஆன பிறகு கற்றுக் கொண்டு மிக முக்கியமான விஷயம் டிரெஸ்ஸிங் ரூமில் சூழல். ட்ரெஸ்ஸிங் ரூம் ஒரு கோவில் அல்லது குருத்துவாரா போல புனிதமான இடம். நீங்கள் அங்கு பல விஷயங்களை வீரர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள்.
டிரெஸ்ஸிங் ரூம் சுற்றுச்சூழலை எவ்வளவு மதிக்கிறீர்கள், மேலும் எந்த அளவுக்கு அங்கிருந்து தகவல்களை வெளியே கசியவிடாமல் இருக்கிறீர்கள் என்பது முக்கியம். ஏனென்றால் ட்ரெஸ்ஸிங் ரூம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பான ட்ரெஸ்ஸிங் ரூம்தான் மகிழ்ச்சியான ட்ரெஸ்ஸிங் ரூம்.
ஐபிஎல் ஏலம் மிகவும் முக்கியமானது. அது உங்களுடைய வேலையில் 50 சதவீதத்தை செய்கிறது. நீங்கள் ஏலத்தில் 22 முதல் 24 வீரர்களை வாங்குகிறீர்கள். இங்கு வாங்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை முக்கியம் கிடையாது. அவர்களின் தரம்தான் முக்கியமானது. ஏனென்றால் ஒரு தரமான வீரரின் இடத்தை இன்னொரு தரமான வீரரால் மட்டுமே பிடிக்க முடியும்.
இதையும் படிங்க: ஒரு மேட்ச் என்னை தடை பண்ணிட்டாங்க.. இல்லனா கதை வேற மாதிரி இருந்திருக்கும் – ரிஷப் பண்ட் பேட்டி
எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால், ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் ஓய்வாக இருக்கும் பட்சத்தில் ஏன் ஏலத்தில் கலந்து கொள்வதில்லை என்பதுதான். நீங்கள்,ஐபிஎல் கேப்டனாக இருந்தால், உங்களுக்கு சர்வதேச போட்டிகள் இல்லை என்றால், நீங்கள் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்கள்தான் இந்த அணியை வழிநடத்த போகிறீர்கள், மேலும் இரண்டு மூன்று மாதங்கள் இந்த வீரர்களுடன் நேரத்தை செலவிடப் போகிறீர்கள்” என்று கூறியிருக்கிறார்.