கம்பீர் சூரியகுமார் இந்த தப்ப செய்யாதிங்க.. கிரிக்கெட்ல யாரும் செய்ய மாட்டாங்க – கெவின் பீட்டர்சன் விமர்சனம்

0
248
Surya

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி நிர்வாகம் குறிப்பாக முக்கியமான ஒரு தவறை செய்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்துக்கு இடையே குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில், 171 ரன்னை துரத்திய இந்திய அணி போட்டியை வெல்ல முடியாமல் தோல்வி அடைந்தது விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

ரைட் லெப்ட் காம்பினேஷன்

கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு பேட்டிங் வரிசையில் ரைட் மற்றும் லெப்ட் என காம்பினேஷன் இருக்கும் படி பேட்ஸ்மேன்களை களத்தில் இறக்கி வருகிறார். உண்மையில் இது பந்துவீச்சாளர்கள் சீக்கிரம் செட்டில் ஆவதை தடுத்து பேட்மேன்களுக்கு உதவி செய்கிறது. நல்ல முறையில் கம்பீர் ஐடியா வேலையும் செய்தது.

இதன் காரணமாக முதல் விக்கெட்டாக சஞ்சு சாம்சன் ஆட்டம் இழந்தால் சூரியகுமார் யாதவும், அபிஷேக் சர்மா முதல் விக்கட்டாக ஆட்டம் இழந்தால் திலக் வர்மாவும் மூன்றாவது இடத்தில் களம் இறங்கி வருகிறார்கள். ஆனால் முதல் நான்கு இடங்கள் தாண்டியும் கம்பீர் இந்த ரைட்ல காம்பினேஷனை தொடர்ந்து செயல்படுத்துவது தற்போது விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

இதைச் செய்திருக்கக் கூடாது

இதுகுறித்து கெவின் பீட்டர்சன் பேசும்பொழுது “இந்தியா தங்களுடைய பேட்டிங் ஆர்டரை சரியான முறையில் அமைக்கவில்லை. உண்மையில் துருவ் ஜுரல் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். நீங்கள் ரைட் லெப்ட் காம்பினேஷன் அமைப்பதற்காக அவரை பேட்டிங் ஆர்டரின் கீழே தள்ளியது சரியானது கிடையாது. உங்களுடைய சிறந்த பேட்ஸ்மேன்கள் பேட்டிங் வரிசையில் மேலே விளையாட வேண்டும் என்பது வழக்கமானது. இது மாறக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஹர்திக் அப்படி செய்யலாமா?.. ஜுரல் மேல நம்பிக்கை வைத்திருந்தா நடக்கிறதே வேற – அம்பதி ராயுடு பேட்டி

இதுகுறித்து இந்திய முன்னால் வீரர் பார்த்திவ் படேல் கூறும் பொழுது “ரைட் லெப்ட் காம்பினேஷன் அமைப்பது பேட்டிங் வரிசையில் முதல் நான்கு இடங்களுக்கு சரியான ஒன்றாக இருக்கும். அதன் பிறகு நீங்கள் உங்களுடைய சிறந்த பேட்ஸ்மேனை விளையாட அனுப்ப வேண்டும். ஜூரல் நல்ல பேட்ஸ்மேன். அவரால் ஒரு நல்ல இன்னிங்ஸை உருவாக்கி இருக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -