நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய இளம் வீரர் துருவ் ஜுரல் மீது நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என அம்பதி ராயுடு கூறியிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 171 ரன்கள் எடுக்க அதை துரத்திய இந்திய அணி இரண்டு ஓவர்கள் கையில் இருந்த போதும் இலக்கை நெருங்க முடியாமல் தோல்வியடைந்தது.
ஹர்திக் பாண்டியா செயல் விமர்சனம்
நேற்றைய போட்டியில் பதினெட்டாவது ஓவரின் இறுதிப்பந்தில் துருவ் ஜுரல் சிங்கிள் எடுக்க முயற்சி செய்ய அதை ஹர்திக் பாண்டியா மறுத்துவிட்டார். 19ஆவது ஓவரை தானே சந்திக்க வேண்டும் என ரன் எடுக்க வேண்டாம் என கூறிவிட்டார். நேற்றைய போட்டியின் போது இதை பார்த்த அனைவருக்கும் மிக ஆச்சரியமாக இருந்தது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பினிஷிங் இடத்தில் சிறப்பாக விளையாடியே துருவ் ஜுரல் வெளி உலகத்திற்கு அறியப்பட்டார். முழுமையான பேட்ஸ்மேனான அவருக்கு சிங்கிள் தர ஹர்திக் பாண்டியா மறுத்தது பெரிய விமர்சனங்களை வெளியில் இருந்து உருவாக்கி இருக்கிறது. அவரை விளையாட விட்டு இருக்க வேண்டும் என பலரும் கூறுகிறார்கள்.
ஹர்திக் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்
இது குறித்து பேசி இருக்கும் அம்பதி ராயுடு கூறும் பொழுது “ஹர்திக் பாண்டியா பெர்ஃபார்மன்ஸ் பொருத்தவரையில் அது மிகவும் சிறப்பானதாக இருந்தது. ஏனென்றால் அந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஒரு முனையில் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. இருந்தபோதும் ஹர்திக் பாண்டியா தனது இன்னிங்ஸை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தினார். கடைசியில் பினிஷிங் டச் கொடுக்க வேண்டிய இடத்தில் அவர் துருவ் ஜுரலை கொஞ்சம் நம்பி இருக்கலாம்”
இதையும் படிங்க : நான் அதை குறை சொல்ல மாட்டேன்.. நாட்டுக்காக பொறுப்பேற்று இதை செய்யணும் – வருண் சக்கரவர்த்தி பேட்டி
“கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டாலும் அதை அடிக்கும் திறமை ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கிறது. எனவே அவர் ஜுரல் மீது நம்பிக்கை காட்டி இருந்தால் போட்டி இன்னும் மிக நெருக்கமாக சென்றிருக்கலாம். இருந்தாலும் கூட ஹர்திக் பாண்டியா தனது இன்னிங்ஸை வேகப்படுத்திய விதம் மிகவும் உற்சாகமானதாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.






