நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி 60 ரன்கள் எடுத்த இந்திய துணை கேப்டன் சுப்மன் கில்லை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் பாராட்டி பேசியிருக்கிறார்.
அதே சமயத்தில் அவர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எப்படியான அணுகுமுறையை கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து காட்டமான முறையில் தன்னுடைய விமர்சனத்தையும் முன் வைத்திருக்கிறார். தற்போது இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
முதலில் கில் குறித்து பேசி உள்ள கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது “நீங்கள் பெரிய மட்டத்திலான கிரிக்கெட் விளையாட பேட்ஸ்மேனாக உள்ளே நுழைந்ததும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவதற்கான ஒரு தூண்டுதலை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்களை நீங்களே செட் செய்ய வேண்டும். தற்போது கில் விளையாடும் விதம் மேம்பட்டிருக்கிறது. அவர் தனக்கு தானே கொஞ்சம் நேரம் கொடுத்து கொள்கிறார். இது அவரை அமைதிப்படுத்தி சிறப்பாக வைக்கிறது. அவர் செய்துள்ள இந்த மாற்றம் அவரைச் சிறந்த முறையில் கொண்டு வந்திருக்கிறது”
“மேலும் ஒரு வேகப்பந்து பேச்சாளர் அவருக்கு ஒரு ஷார்ட் பந்து வீச முடிவதில்லை. அவர் பின் காலில் சென்று ஒரு அழகான சிறிய பன்ச் ஒன்றை கொடுக்கிறார். இதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் இப்படியான பந்தை அவருக்கு வீச முடிவது இல்லை. மேலும் அவர் தன்னுடைய விளையாட்டை மேம்படுத்திக் கொண்டு, ரோகித் சர்மா செய்தது போல நூறு ரன்கள் அடிக்க விரும்புகிறார்”
மேலும் பேசி உள்ள அவர் கூறும் பொழுது ” எனக்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை பார்க்கும் பொழுது அவர்கள் 130,140 ரன்கள் எடுக்கும் பசி இல்லாதவர்கள் போல தெரிகிறது. இங்கு அவர்களிடம் மிஸ் ஆகும் பெரிய விஷயம் இதுதான். இங்கு அவர்களுக்கு 40 ரன் அல்லது 50 ரன் கிடைக்கிறது. அவர்களும் தங்களுக்கு ரன் கிடைத்துவிட்டது என்று மிகவும் குளிர்ச்சியான முறையில் மாறிவிடுகிறார்கள். ஏனென்றால் இதன் மூலம் அவர்களுக்கு இன்னொரு போட்டி விளையாட கிடைத்து விடுகிறது”
இதையும் படிங்க : ஓபனா சொல்றன்.. வருண் சக்கரவர்த்தி ஆடவேண்டாம்.. அதுக்கான முக்கிய காரணம் இதுதான் – சுரேஷ் ரெய்னா பேச்சு
“அவர்கள் தாங்கள் விரும்பியதை செய்வேன் என்றும் அதற்குப் பிறகு அப்படியே இங்கிலாந்து சென்று கோல்ப் விளையாடி பொழுதை கழிப்பேன் என்றும் நினைக்கிறார்கள். நான் அவர்களுக்கு என்ன சொல்கிறேன் என்றால் தயவு செய்து நீங்கள் வாருங்கள், உங்களிடம் பெரிய ரன் அடிக்கும் பசி இல்லாமல் இருக்கிறது, நீங்கள் பெரிய சதங்களை எடுக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறுவேன்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.