தோனி தந்திரமானவர்; 2010 ஐபிஎல் பைனல் இப்படித்தான் ஜெயிச்சோம்.. இம்முறையும் அப்படி செய்வார் – முன்னாள் சிஎஸ்கே வீரர் பத்ரிநாத் பேட்டி!

0
4307

2010 ஐபிஎல் பைனலில் தோனி இப்படித்தான் சில யுக்திகளை கையாண்டார். இறுதியாக கோப்பையை வென்று விட்டோம். இந்த முறையும் அதை கண்டிப்பாக செய்வார் என்று பேட்டி அளித்துள்ளார் பத்ரிநாத்.

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு இதுவரை வெற்றிகரமாக இருந்திருக்கிறது. லீக் போட்டிகளில் இரண்டாம் இடம்பிடித்து, முதல் குவாலிபயர் போட்டியில் வெற்றிபெற்று நேரடியாக பைனலுக்குள் சென்றுறிருக்கின்றனர். சிஎஸ்கே அணி 10வது முறையாக பைனலுக்குள் சென்று இருக்கிறது. இதற்கு முன்னர் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. இம்முறையும் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பைனலில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திவிட்டு நேரடியாக பைனலுக்குள் வந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர்களது சொந்த மைதானத்தில் எதிர்கொள்வதால் சற்று சவாலான போட்டியாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்நிலையில் 2010ஆம் ஆண்டு சில யுக்திகளை பயன்படுத்தி பலம்மிக்க மும்பை இந்தியன்ஸ் அணியை தோனி வீழ்த்தினார். கோப்பையை சிஎஸ்கே அணிக்கு பெற்றுதந்தார். இம்முறையும் அந்த யுக்திகளை பயன்படுத்துவார்கள் என்று தோனி குறித்த சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் பத்ரிநாத்.

“நம்முடைய ஸ்கோர் குறைவாக இருக்கிறது அல்லது அதிகமாக இருக்கிறது என்பது பற்றிய கவலை வேண்டாம். ஃபீல்டிங்கில் ஒவ்வொருவரும் தெளிவாக செயல்பட்டால், ஒருவர் ஒரு ரன் சரி செய்து கொடுத்தால், ஒவ்வொருவரிடமிருந்தும் பங்களிப்பு வரும் பட்சத்தில் ஒட்டுமொத்த அணியும் சேர்ந்து குறைந்தபட்சம் 10+ ரன்களுக்கு அதிகமாக காப்பாற்றி இருப்போம். அது நமது ஸ்கோரை விட உயர்த்தி காட்டும்”

- Advertisement -

“மேலும் ஃபீல்டிங்கில் இருக்கும்பொழுது என்னை கவனியுங்கள். கடைசி நேரத்தில் நான் இரண்டு அல்லது மூன்று அடிகள் தள்ளி நிற்கச்சொல்வேன். அப்போது தவறவிடும் கேட்சைக் கூட பிடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. பேட்டிங்கை விட ஃபீல்டிங்கில் இணைந்து செயல்படும் அணி ஆட்டத்தை தன்வசப்படுத்த முடியும். மேலும் பந்துவீச்சாளர் யாரை பயன்படுத்த வேண்டும் மற்றும் அவருக்கு ஃபீல்டிங் எப்படி நிறுத்த வேண்டும் என்பதில் தோனி தெளிவாக இருப்பார்.

ஃபீல்டிங்கில் தவறு செய்தால் மட்டுமே தோனி கோபப்படுவார். வேறு எதற்கும் அவர் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. ‘தன் கட்டுப்பாட்டில் எது இருக்கிறதோ அதில் கவனம் செலுத்துங்கள்! விக்கெட் வரும்போது வரட்டும்.’ என்றும் பில்டிங்கில் இருக்கும் பொழுது கூறுவார். தொடர்ந்து நம்பிக்கை கொடுப்பார். இதுதான் தோனியின் சீக்ரெட்.” என்று 2010 ஐபிஎல் பைனலில் தோனி செய்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார் பத்ரிநாத்.