பஞ்சாப் அணிக்கு இவர் தான் டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட் – கசிகோ ரபாடா புகழாரம்

0
81
Kasigo Rabada

நேத்து மும்பை வான்கடேவுல சென்னை அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் இடையே பரபரப்பான ஒரு ஆட்டம் நடந்து முடிஞ்சிருக்கு. இரண்டு அணிகளுக்குமே இது முக்கியமான ஆட்டம் என்பதால் கொஞ்சம் கூடுதல் எதிர்பார்ப்பு மற்ற அணி இரசிகர்களிடமும் இருந்தது.

நேற்றைய போட்டியை எடுத்துக்கொண்டால் அதை தவான்களின் போட்டி அப்படியென்றே சொல்லலாம். பேட்டிங்ல ஷிகர் தவான் அப்படியென்றால், பவுலிங்கில் ரிஷி தவான். இதில் அவர் முகத்துக்கு மாஸ்க் அணிந்துக்கொண்டு பந்துவீசியது எல்லோருக்கும் ஆச்சரியம் தரக்கூடிய விசயமா அமைந்தது!

- Advertisement -

இந்த 32 வயதான மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரிஷி தவான் முதல் ஐபிஎல் சீசன் மும்பை அணியால வாங்கப்பட்டு, அடுத்து பஞ்சாப், கடைசியா 2017-ல் 55 இலட்சத்துக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டு விளையாடி இருந்தார். அதற்குப் பிறகு ஆறு வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் ஐபிஎல்-ல் விளையாடுகிறார். 2016-ல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளிலும், ஒரே ஒரு 20/20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். தற்பொழுது இமாச்சல் பிரதேச அணியின் கேப்டனாக இருக்கும் இவர், கடைசியாக நடந்த விஜய் ஹசாரே டிராபியை வென்றிருக்கிறார். இதுதான் மீண்டும் ஐபிஎல் வாய்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது.

நேற்றைய ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசி 39 ரன்களை விட்டுத் தந்திருந்தாலும், இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக ஆட்டத்தின் கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவையாய் இருக்க, எம்.எஸ்.தோனிக்கு எதிராய் பந்துவீசி 15 ரன்களை மட்டுமே விட்டுத்தந்ததோடு அவரது விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.

இதுக்குறித்தி சக அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா கூறும்பொழுது ” அவர் ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசவந்தார். எம்.எஸ்.தோனிக்கு எதிராக நீங்கள் பந்துவீசுவது கொஞ்சம் பதட்டமான விசயம்தான். மைதானத்தில் ஒரு சிவப்புச் சட்டையும் இல்லை. எல்லாம் மஞ்சள் சட்டைகள்தான். எல்லோரும் m.s.தோனி பெயரை உச்சரிக்கின்றார்கள். இந்த நிலையில் அவர் மிகச்சிறப்பாக பந்து வீசினார். இதற்கான அங்கீகாரம் அவருக்கானது” என்று கூறினார்.

- Advertisement -