கருண் நாயர் திடீர் சரிவுக்கு காரணம் என்ன? பிரச்சினை இது தான்.. விதர்பா பயிற்சியாளர் கருத்து

0
107

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய அனுபவம் வாய்ந்த வீரர் கருண் நாயர் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. நடப்பு டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ் விளையாடியுள்ள கருண் நாயர், மொத்தமாக 131 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.

 0, 20, 31, 26, 40, 14 ஆகிய ரன்கள் தான் அடித்து இருக்கின்றார். ஒருமுறை கூட இந்த தொடரில் அவர் 40 ரன்கள் தாண்டவில்லை. இதில் அவருடைய சராசரி வெறும் 22 என்ற அளவில் இருக்கிறது. ஆனால் இந்த தொடருக்கு முன்பு நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் இரட்டை சதம் அடித்திருந்தார்.

- Advertisement -

தொடர்ந்து சொதப்பல்:

 இதே போன்ற 2024-25 உள்நாட்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் விதர்பா அணிக்காக ஒன்பது இன்னிங்ஸில் 863 ரன்களை அவர் குவித்திருந்தார். அதற்கு முன்பு விஜய் ஹசாரே கோப்பையில் 779 ரன்களை அவர் அடித்திருந்தார். இதில் ஐந்து சதம் அடங்கும்.

இதனால் கருண் நாயர் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அதனை அவர் ஏமாற்றி இருக்கின்றார் கருண் நாயரின் இந்த சரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து விதர்பா அணியின் பயிற்சியாளர் கணி கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

 இது குறித்து பேசிய அவர் கருண் நாயர்,” மனதளவில் மிகவும் வலிமையான வீரர். அதேசமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவ்வளவு நாள் கழித்து கம்பேக் கொடுப்பது என்பது எளிதான காரியம் கிடையாது. அதை அவர் செய்திருக்கின்றார். அவரிடம் திறமை மற்றும் உத்வேகம் இருக்கின்றது.”

கருண் நாயரின் பிரச்சினை:

“ஆனால் ஒரு இன்னிங்ஸ் மட்டும் கருண் நாயர் சிறப்பாக விளையாடினால் போதும். அவர் தனது பார்மை மீட்டு விடுவார். அவர் நன்றாகத்தான் விளையாடுகிறார். அவர் இன்னிங்ஸை நல்ல முறையில் தொடங்குகிறார். ஆனால் அதை பெரிய அளவு மாற்ற முடியவில்லை.லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கூட முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் எடுத்தார். அவர் பெரிய ஸ்கோர் அடிப்பதன் மூலம் தன்னுடைய நம்பிக்கையை அவரால் வளர்த்துக் கொள்ள முடியும்.”

இதையும் படிங்க: 4வது டெஸ்ட்.. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யனும்.. ரஹானே யோசனை

 “லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கூட அவர் ஒரு சிறப்பான பந்தில் தான் ஆட்டம் இழந்தார். என்னைக் கேட்டால் கருண் நாயர் கொஞ்சம் தற்காப்பு பாணியில் சென்று விட்டாரோ என்று தோன்றுகின்றது. ஒரு பந்தை அடிக்கலாமா இல்லை விட்டுவிடலாமா என்ற குழப்பத்தில் அவர் இருக்கின்றார். கண்டிப்பாக எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும்  கருண் நாயரை சேர்க்க வேண்டும்” என்று கணி கூறியுள்ளார்.

- Advertisement -