4வது டெஸ்ட்.. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யனும்.. ரஹானே யோசனை

0
288

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த தருணத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை மான்செஸ்டர் நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கிரிக்கெட் வீரர் ரஹானே வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இங்கிலாந்து மண்ணில் நான்காவது நாள் மற்றும் ஐந்தாவது நாளில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கின்றது.

- Advertisement -

குல்தீப் யாதவ் அணியில் சேருங்கள்:

அப்போது ரன்களை குவிப்பது என்பது சிரமமான காரியமாக இருக்கின்றது. இங்கிலாந்து வீரர்களும் அபாரமாக பந்து வீசுகிறார்கள். என்னை கேட்டால், முதலில் இந்திய அணி பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டிய வாய்ப்பை தவறவிட்டது.

இனிமேல் இந்திய அணி அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் கூடுதலாக ஒரு பௌலரை சேர்க்க வேண்டும். ஏனென்றால் டெஸ்ட் போட்டியில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று ரகானே கூறியுள்ளார். ரஹானே கூற்றுப்படி குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றால், ஒன்று மூன்றாவது டெஸ்டில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தரை வெளியே அனுப்ப வேண்டும்.

- Advertisement -

ரஹானே பாராட்டு:

இல்லையென்றால் நன்றாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்த நிதிஷ்குமார் ரெட்டியை வெளியே அனுப்ப வேண்டும். இதனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பென் ஸ்டோக்சை பாராட்டி பேசியுள்ள ரஹானே, ஒவ்வொரு பேட்ஸ்மேனும் மதிய நேர இடைவெளிக்கு முன்பு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருப்பார்கள்.

இதையும் படிங்க: லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி ஒரு விஷயம் இல்ல.. இந்த தப்பை தொடர்ந்து செஞ்சா இங்கிலாந்து அணி வசமா மாட்டும் – ரவி சாஸ்திரி

அந்த சமயத்தில் விக்கெட் எடுக்கும் பழக்கத்தை ஸ்டோக்ஸ் வைத்திருக்கின்றார். குறிப்பாக மதியநேர உணவு இடைவெளியின் போது பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க மாட்டார்கள் என்று பாணியில் ஃபீல்டர்கள் இருப்பார்கள். ஆனால் ஸ்டோக்ஸ் அந்த கட்டத்தில் கூட விழிப்புணர்வுடன் இருந்து ரன் அவுட் செய்து இருக்கின்றார். அதுதான் போட்டிக்குள் இங்கிலாந்து அணியை மீண்டும் வந்ததற்கான வழியாகும்.

- Advertisement -