இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி முடித்தவுடன் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட துபாய் செல்கிறது. இந்தத் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று இந்திய அணி நிர்வாகம் நம்புகிறது.
இந்த சூழ்நிலையில் சீனியர் வீரர்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் சீனியர் வீரர்கள்
டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக, அவருக்கு அடுத்ததாக கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கௌதம் கம்பீர் இந்திய சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுடனும் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இணைந்து விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது பயிற்சியின் கீழ் சூரியகுமார் தலைமையிலான டி20 இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி சீனியர் வீரர்கள் கொண்ட ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் சிறப்பான செயல்பாட்டை தவறவிடுகிறது. இதற்கு முக்கிய காரணமாக விராட் ரோஹித் மற்றும் கம்பீர ஆகியோருடைய வயது ஏறக்குறைய ஒரே விகிதத்தில் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் அறிவுரைகள் சொல்ல கம்பீர் தயங்குவதாக தகவல்கள் கசிகிறது. இந்த சூழ்நிலையில் பயிற்சியாளரின் அறிவுரையை கேட்க சீனியர் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என கபில் தேவ் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கபில்தேவ் அறிவுரை
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரன்கள் இல்லாத போது எல்லா வகைகளிலும் பிரச்சனைகள் இருக்கும். இதற்கு ஒரே சிறந்த வழி என்னவென்றால் உங்கள் வகை கிரிக்கெட் வீரர்களிடம் பேசுவது தான். பழைய வீடியோக்கள் பார்த்து நீங்கள் எப்படி விளையாடினீர்கள் என்று பகுப்பாய்வு செய்யுங்கள். ராகுல் டிராவிட் மற்றும் சுனில் கவாஸ்கர் போன்ற வீரர்களிடம் நீங்கள் பேசலாம். நீங்கள் பெரிய நட்சத்திரங்களாக இருப்பதால் உங்களை விட குறைவாக கிரிக்கெட் விளையாடிய ஒருவர் உங்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்று சொல்ல முடியாது என்று அர்த்தமல்ல. பயிற்சியாளர் உங்கள் தரத்தை சேர்ந்தவர் அல்ல, என்றாலும் அவர் கூறுவதை நீங்கள் கேட்க வேண்டும்.
இதையும் படிங்க:விராட் கோலி மட்டும்தான் கிங்கா?. என்னோட ரெக்கார்ட பிரேக் பண்ண இவரும் இப்போ கிங்தான் – முன்னாள் ஆர்சிபி ஜாம்பவான் பேட்டி
மேலும் நீங்கள் வெளி ஆட்களிடம் இதுகுறித்து விவாதிக்கலாம். உங்களுக்கு 20-25 ரோஹித் விராட் கோலி மாதிரி வராது. ஆனால் பழைய வீடியோக்களை பார்த்தால் எப்படி விளையாடலாம் என்பது குறித்த ஒரு தன்னம்பிக்கை வரும். கிரிக்கெட் என்பது தன்னம்பிக்கையின் விளையாட்டு. வயது ஒரு காரணி தான், ஆனால் அதற்காக அவர்கள் விளையாட்டை விளையாட மறந்து விட்டார்கள் என்று கூற முடியாது அதை சரி செய்ய வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.






