விராட் கோலி மட்டும்தான் கிங்கா?. என்னோட ரெக்கார்ட பிரேக் பண்ண இவரும் இப்போ கிங்தான் – முன்னாள் ஆர்சிபி ஜாம்பவான் பேட்டி

0
229

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இது இந்திய அணிக்கு வெறும் சம்பிரதாயமான போட்டியாக இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியாவது பெற்று விடைபெறும் நிலையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆர்சிபி முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் இந்திய வீரர் குறித்த சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் தோல்வியை தழுவிய நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான ஒரு நாள் அணிக்கு எதிராகவும் ஒரு நாள் தொடரை இழந்திருக்கிறது. இதில் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் களம் இறங்கிய ரோஹித் சர்மா முதல் போட்டியில் வெறும் இரண்டு ரன்னில் வெளியேறினாலும் இரண்டாவது போட்டியில் தனது அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

90 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், 119 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். இதில் குறிப்பாக 7 சிக்ஸர்கள் அடித்து ஒரு நாள் தொடரில் 331 சிக்சர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரர் கிறிஸ் கெயிலை ரோஹித் சர்மா முந்தினார். ரோஹித் சர்மா மொத்தமாக ஒரு நாள் தொடரில் 338 சிக்சர்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் சாஹித் அப்ரிடி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் கெயில் அவரைப் பாராட்டும் விதமாக சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ரோகித் சர்மாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டுக்கு எப்போதுமே ஒரு புதிய பொழுதுபோக்கு என்பது தேவை. நான் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து செய்ததைப் போலவே ரோகித் தற்போது இத்தனை வருடங்களாக மகிழ்வித்து வருகிறார். எனவே அவர் இப்போது நகரத்தின் புதிய ராஜா. அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் அவர் அதிக சிக்ஸர்கள் அடிப்பார் எனவும் நம்புகிறேன்” என கெயில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:நான் WTC பைனலில் என்ன செஞ்சேன்னு.. பிசிசிஐக்கு நல்லா தெரியும்.. ஆனாலும் எனக்கு அவங்க வாய்ப்பு கொடுக்கல – ரகானே வேதனை

கிரிக்கெட்டின் கிங் என்று விராட் கோலி அழைக்கப்பட்டு வரும் நிலையில் ரோஹித் சர்மாவும் புதிய கிங் என்று கெயில் கூறி இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய முடித்த பிறகு அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளதால் அதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -