கில், ஸ்ரேயாஸ் கிடையாது இந்தியாவின் அடுத்த கேப்டனாக இவர் தான் வரனும்..கபில்தேவ் கருத்து

0
14

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில் பல எதிர்கால கேப்டன்களை இந்த தொடர் அடையாளம் காட்டி இருக்கிறது. குறிப்பாக பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ், சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

ஏற்கனவே கொல்கத்தா அணியின் கேப்டனாக கோப்பையை அவர் கைப்பற்றும் நிலையில் தற்போது பஞ்சாப் அணிக்கும் அவர் அபாரமாக தலைமை தாங்கினார். இதனால் பலரும் ஸ்ரேயாஸ் தான் அடுத்த இந்திய அணி கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.  ஸ்ரேயாஸ்க்கும் வயது குறைவு என்பதால் அவர் அடுத்த ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணியை வழிநடத்தலாம் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

ஹர்திக் தான் என் சாய்ஸ்:

ஆனால் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக கில் தான் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தற்போது அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கபில்தேவ் மற்றும் ஸ்ரேயாஸ்  என இருவரும் பேரையும் கூறாமல் ஹர்திக் பாண்டியா தான் இந்திய ஒரு நாள், டி20 அணியின் கேப்டனாக வரவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், “என்னைப் பொருத்தவரை ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டனாக வரவேண்டும். தற்போது இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் பதவிக்கு பல பேர் போட்டி போடுகிறார்கள். ஆனால் என்னுடைய சாய்ஸ் ஹர்திக் பாண்டியா தான். ஹர்திக் இளம் வீரராக இருக்கிறார். அவரை வைத்து நாம் இன்னும் பல ஐசிசி தொடருக்கு அணியை கட்டமைக்கலாம்.”

- Advertisement -

டெஸ்டிலும் ஹர்திக் விளையாடனும்:

“ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆட வேண்டும். ஆனால் தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதால், இந்திய அணிக்கு ஒரு நாள் டி20 போட்டிக்கு என பல கேப்டன்கள் தேவைப்படுகிறார்கள்” என்று கபில்தேவ் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தபோது, ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும் மறுமுறை இறுதிப்போட்டி வரையும் அழைத்துச் சென்றார்.

இதையும் படிங்க: தோனி செய்த 3 பெரிய தப்பு.. ருதுராஜுக்கு இத பண்ணிருக்கவே கூடாது.. நேத்து கொடுமை.. ரசிகர்கள் கோபம்

ஆனால் ஹர்திக் பாண்டியா அதன் பிறகு கேப்டனாக எந்த ஒரு பெரிய சாதனையும் படைக்கவில்லை. மும்பை அணி தொடர்ந்து ஹர்திக் பாண்டியா தலைமையில் தடுமாறி வருகிறது. இந்த சூழலில் ஹர்திக் பாண்டியாவின் பெயரை கபில்தேவ் முன்மொழிந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -