தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் நிறைய தவறுகள் தனிப்பட்ட முறையில் செய்ததுதான் சிஎஸ்கே அணியை தற்போது பெரிய அளவில் பாதித்துவிட்டதாக அந்த அணியின் ரசிகர்களே கருத்து தெரிவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் சிறப்பான முறையில் பெரிய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றியுடன் ஆரம்பித்தது. அந்த வெற்றியில் நூர் அகமது பந்துவீச்சு மற்றும் ரச்சின் ரவீந்தரா கேப்டன் ருதுராஜ் பேட்டிங் மிக முக்கிய காரணமாக இருந்தது. எனவே அணியின் முக்கிய பலவீனங்கள் வெளியே தெரியவில்லை.
நேற்றைய போட்டியின் தவறுகள்
நேற்று முதலில் பந்துவீசிய சிஎஸ்கே அணி பவர் பிளேவின் இறுதி ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீசினார். அதற்கு அடுத்து ஏழாவது ஓவருக்கு வந்த ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி வந்த இடது கை பேட்ஸ்மேன் அபிஷேக் போரல் விக்கெட்டை கைப்பற்றினார். இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினை தொடர்ந்து பந்து வீச வைத்த ருதுராஜ் அக்சர் படேல் களத்தில் இருந்ததால் விக்கெட் எடுத்த ஜடேஜாவை தொடர்ந்து பந்து வீச வைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசிய வரும் நூர் அகமதுவை மூன்று ஓவர்கள் மட்டுமே பந்து வீச வைத்தார். முதல்முறையாக பந்துவீச்சில் சிக்கனமாக இருந்த அஸ்வினையும் மொத்த ஓவர்களையும் முடிக்க விடவில்லை. மேலும் இரண்டாவது வேகம் பந்துவீச்சாளராக அன்சூல் காம்போஜை கொண்டு வராமல், தன்னுடைய மகாராஷ்டிர சக வீரர் முகேஷ் சௌத்ரியை கொண்டு வந்து தவறு செய்தார்.
தோனி செய்த பெரிய தவறுகள்
தற்போது தோனியால் பத்து ஓவர்தான் விளையாட முடியும் என பயிற்சியாளர் பிளமிங் வெளிப்படையாக கூறினார். அப்பொழுது 20 ஓவர் களுக்கும் விளையாட முடியாத ஒரு வீரரை அணியில் வைத்திருப்பது தவறாகும். எனவே இந்த வகையில் தோனி ஓய்வு பெற்று இருக்க வேண்டும். இரண்டாவதாக ஏலத்தில் அஸ்வினை 10 கோடிக்கு வாங்கியது பெரிய தவறு. அஸ்வினை தன்னை வாங்கியது தோனி எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நான் ஒரு கொடிய காம்போவை ரெடி பண்ணி இருக்கேன்.. இதுக்காகவே கேக் வெட்ட போறேன் – சஞ்சு சாம்சன் பேட்டி
மேலும் தனக்கு பிறகு சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஒரு ருதுராஜை கொண்டு வந்தது தோனிதான். ஆனால் அவருக்கு பந்துவீச்சாளர்களை சரியாக சுழற்றி பந்து வீசவைக்கவே தெரியவில்லை. கேப்டனாக அடிப்படை விஷயத்தில் மிகவும் பின்தங்கி இருக்கிறார். எனவே தற்போது சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்கு மூலக் காரணம் தோனிதான் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.






