நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் மோசமாக செயல்பட்ட இந்திய நட்சத்திர வீரர்கள் மீண்டும் திரும்பி சரியான பாதையில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? என கபில் தேவ் அறிவுரை கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களை விட மூத்த வீரர்களான நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இவர்கள் சராசரியாக விளையாடி இருந்தாலே இந்திய அணி இந்த தொடரை வென்று இருக்க முடியும் அல்லது ஒரு போட்டியையாவது வென்று இருக்க முடியும்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் பயணமாக இருக்கிறது. ஏற்கனவே மோசமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் இருவருக்கும் இது சவாலான தொடராக அமைய இருக்கிறது. இந்தத் தொடரில் சரியாக விளையாடாவிட்டால் இவர்கள் நீக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
மேலும் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவதற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளை வெல்ல வேண்டிய தேவையும் இருக்கிறது. எனவே நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருவருக்கும் இந்த தொடர் பெரிய சவாலை கொடுக்க காத்திருக்கிறது.
இது குறித்து பேசி இருக்கும் கபில் தேவ் கூறும்பொழுது “திரும்பி நல்ல முறையில் வருவதற்கு மீண்டும் அடிப்படைகளுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் செல்ல வேண்டும். நான் ரூமில் இருந்து எல்லாவற்றையும் மேம்படுத்துவேன் என்று சொன்னால் அது நிச்சயம் முடியவே முடியாது. நீங்கள் கடினமான நேரத்தில் இருந்தால் நிச்சயம் முன்பை விட அதிக பயிற்சிகள் செய்ய வேண்டும்”
இதையும் படிங்க: 10 விக்கெட்.. பும்ரா புவியை தாண்டி.. அர்ஷ்தீப் படைக்கும் வரலாறு.. தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் நடக்குமா?
“நாம் சராசரியாக விளையாடும் காலகட்டத்தை விட மோசமாக விளையாடும் சூழ்நிலையில்தான் பயிற்சியை தீவிரமாக வேண்டும். நாம் எந்த அளவிற்கு நம்முடைய பயிற்சிகளை அதிகம் ஆக்கி, அடிப்படைகளுக்கு திரும்பி அதிகம் உழைக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் மீண்டும் சிறப்பாக திரும்பி வர முடியும்” என்று அறிவுரை கூறியிருக்கிறார்.