நடைபெற இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் எந்த இந்திய பந்துவீச்சாளரும் செய்யாத சாதனையை செய்வதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.
தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியை தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை டர்பன் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
டி20 பவுலிங் யூனிட்டின் தூண்
ஐபிஎல் தொடர் செயல்பாடுகளில் இருந்து இந்திய தேசிய அணிக்கு உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் ராகுல் டிராவிட் பயிற்சி காலத்தில் கொண்டுவரப்பட்டார்கள். இதில் உம்ரான் மாலிக் இடம் வேகம் இருந்தாலும் கூட விவேகம் இல்லாத காரணத்தினால் அவரால் தொடர்ந்து இந்திய தேசிய அணியில் நீடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சு குறுகிய டி20 வடிவ கிரிக்கெட்டுக்கு சிறந்த முறையில் இருந்த காரணத்தினால், ராகுல் டிராவிட் தொடர்ந்து அவரை இந்திய டி20 அணியில் விளையாட வைத்து மெருகேற்றி வந்தார். இதன் காரணமாக தற்பொழுது அர்ஷ்தீப் சிங் இந்திய டி20 அணியின் பௌலிங் யூனிட்டின் தூணாக மாறி இருக்கிறார். நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக வந்தார்.
10 விக்கெட்டுகளில் வரலாற்று சாதனை
நடைபெற இருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அர்ஷ்தீப் சிங் 10 விக்கெட்டுகள் கைப்பற்றினால், ஒரு கிரிக்கெட் காலண்டர் வருடத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்கின்ற வரலாற்று சாதனையை படைப்பார். தற்போது இந்த ஆணடு அர்ஷ்தீப் சிங் 28 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் 10 விக்கெட்டுகள் எடுத்தால் 38 விக்கெட் உடன் அவர் புவனேஸ்வர் குமார் சாதனையை முறியடிப்பார்.
இந்தப் பட்டியலில் புவனேஸ்வர் குமார் 2022 ஆம் ஆண்டு 37 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் அதே ஆண்டு அர்ஷ்தீப் சிங் 32 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் இந்த பட்டியலில் பும்ராவும் இருக்கிறார். ஆனால் அவருக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கப்படுகின்ற காரணத்தினால் அவரால் இந்த சாதனையை செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முதல் 3 டெஸ்ட்.. அது ஆஸி பும்ராவுக்கு போட்ட பிளான்.. அவர காப்பாத்துங்க – சைமன் டால் கருத்து
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு கிரிக்கெட் காலண்டர் வருடத்தில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர்கள்:
37- புவனேஷ்வர் குமார் (2022)
32- அர்ஷ்தீப் சிங் (2022)
28- அர்ஷ்தீப் சிங் (2024)
28- ஜஸ்பிரித் பும்ரா (2016)
26- அர்ஷ்தீப் சிங் (2023)