இந்திய சிறந்த கேப்டன் கபில்தேவ் கங்குலி தோனி கோலி கிடையாது.. இவர்தான்.. கலங்கடிக்கும் கம்பீர்!

0
3781
Gambhir

இந்திய கிரிக்கெட்டின் எழுச்சி என்பது 1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி கபில்தேவ் தலைமையில் கைப்பற்றிய பொழுது ஆரம்பித்தது!

அங்கிருந்துதான் இந்தியாவில் கிரிக்கெட் என்பது பெரிய அளவில் பரவ ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் செல்லாத இடங்களுக்கு எல்லாம் இந்தியாவுக்குள் நுழைய ஆரம்பித்தது.

- Advertisement -

இந்தியாவின் சிறந்த கேப்டன்கள் என்ற வகையில் எடுத்துக் கொண்டால், 1983ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற கபில்தேவ் கட்டாயம் இடம் பெறுகிறார். ஏனென்றால் அங்கிருந்துதான் இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கான ஒரு அழுத்தமான புள்ளி கிடைத்தது.

இதற்கு அடுத்து அசாருதீன் அதிக காலங்கள் கேப்டன் பொறுப்பில் இருந்திருந்தாலும், நடுவில் சச்சின் வந்து போய் இருந்தாலும், சவுரவ் கங்குலிதான் ஒரு கேப்டனாக இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவராக இருக்கிறார்.

கங்குலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், மகேந்திர சிங் தோனி என்று பல திறமையான இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைய ஆரம்பித்தார்கள். அதற்கு முக்கியக் காரணமாக கங்குலி இருந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இரண்டு உலகக் கோப்பைகள் மற்றும் ஒரு ஐசிசி தொடரை வென்று மகேந்திர சிங் தோனி இருக்கிறார். இவர் காலத்திலும் சிறந்த இளம் வீரர்கள் வந்தார்கள். மேலும் இவர் உலகக் கோப்பையையும் வென்றார்.

இதற்கு அடுத்து கேப்டனாக விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானவர். அதாவது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோலி மிகவும் முக்கியமானவர். இவருடைய காலத்தில்தான் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தரமான வேகப்பந்து வீச்சு தாக்குதலை வைத்திருந்தது.

மேலும் விராட் கோலி கேப்டன்சி காலத்தில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது. மேலும் எந்த நாட்டிலும் இந்திய அணியால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை மட்டுமல்ல தொடரையும் வெல்ல முடியும் என்று நிரூபித்தது.

எனவே இந்திய கிரிக்கெட்டில் கேப்டன்கள் என்ற அடிப்படையில் இந்த நால்வரும் மிக முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்? என்றால், கேள்வியை எதிர்கொள்ள கூடியவர்கள், இந்த நால்வரில் இருந்து யாரையாவதுதான் தேர்வு செய்வார்கள்.

இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீரிடம் இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் யார்? என்கின்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இப்பொழுதும் அவரிடமிருந்து வந்த பதில் எப்பொழுதும் போல் ஆச்சரியம் அளிக்கக் கூடிய ஒன்றாகவே இருந்தது. அவர் இந்தியாவின் தலைசிறந்த கேப்டனாக அனில் கும்ப்ளேவை தேர்ந்தெடுத்தார்.

அனில் கும்ப்ளே 2007 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று 14 போட்டிகளில் தலைமை தாங்கி வழி நடத்தினார். இவருடைய கேப்டன்ஷியில் இந்திய அணி மூன்று போட்டிகளில் மட்டும் வென்று, ஐந்து போட்டிகளில் தோற்று, ஆறு போட்டிகளை டிரா செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது!