இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் உள்நாட்டில் தொடர்ந்து தடுமாறி வருவதற்கான காரணங்கள் குறித்து இந்திய லெஜெண்ட் கபில்தேவ் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணி உள்நாட்டில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் ஆகி இருக்கிறது. மேலும் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவது சந்தேகத்திற்கு இடமாக இருக்கிறது.
நீங்கள் தடுமாறத்தான் செய்வீர்கள்
இந்த நிலையில் இந்தியா பேட்ஸ்மேன் தற்போது எந்த மாதிரியான தவறை செய்கிறார்கள்? என்றும், இதிலிருந்து மீண்டு வருவதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் கபில்தேவ் அறிவுரை கூறியிருக்கிறார். இந்திய பேட்ஸ்மேன்கள் மீண்டு வருவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து கபில்தேவ் பேசும்பொழுது “முன்பிருந்த இந்திய பேட்ஸ்மேன்கள் உடைய தனிப்பட்ட பாணி மற்றும் புட் வொர்க், பல்வேறு ஆடுகளங்களில் விளையாடிய பழக்கம்தான் அவர்களை வெற்றிகரமாக வைத்திருந்தது. ஆனால் இன்றைய முன்னணி வீரர்கள் எத்தனை பேர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள்? இதுதான் முக்கியமான விஷயம். நீங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடாமல், தரமான பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளாமல் இருந்தால், நீங்கள் போராடப் போகிறீர்கள் என்று அர்த்தம்”
இப்பொழுது இதுதான் தேவை
“இங்கு நாம் எப்படியான ஆடுகளத்தில் விளையாடுகிறோம் என்பது மிகவும் முக்கியம். நீங்கள் இரண்டரை நாட்களில் போட்டி முடியும் ஆடுகளத்தில் விளையாடக் கூடாது. டாஸ் தோற்றால் ஆட்டத்தை தோற்றுவிடும் ஆடுகளங்கள் அமைக்க கூடாது. 200 ரன்கள் கூட தாண்ட முடியாத ஒரு ஆடுகளத்தை வைத்திருப்பதால் யாருக்கு என்ன பயன்? ஐந்து நாள் போட்டிக்கு இது நல்லது கிடையாது”
இதையும் படிங்க : தெஆ முதல் ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. முக்கிய சிக்கல்.. 3 பேரில் யாருக்கு வாய்ப்பு?
“நாங்கள் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக பிசியாக இருக்கிறோம். அதாவது நமது பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தை அரிதாகவே எதிர்கொள்கிறார்கள். ஸ்பின் மற்றும் சீமிங் ஆடுகளங்களில் நீங்கள் தாக்குப் பிடித்த விளையாடுவதற்கு உங்களுக்கு பொறுமையும் பல்வேறு திறமையும் தேவை” என்று கூறியிருக்கிறார்.






